பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இடம் : அரண்மனை மண்டபம் காலம் : முற்பகல் (இராணி, ஊர்வசி, வீரசிம்மன், சர்வாதிகாரி, அதிகாரிகள்) (அனைவரும் அமர்ந்திருத்தல். வீரர்கள் அரச வணக்கம் கூறியபின்) X வீரவி : எங்கே சேனாதிபதி? சர்வா : அவர் எப்பொழுதும் தாமதமாகத்தான் வருவார். ஏனென்றால், தாங்க முடியாத பெரும் பதவி களை எல்லாம் வேண்டுமென்றே ஏற்ப வரல்லவா? - (கதேவன் மணிவண்ணனோடு வந்து, அரசனை வணங்கியபின் தனது இருப்பிடத்தில் அமர, மணிவண்ணன் வணங்குகிறான்) வீரசி : வருக கலைமணியே, அமருக! துணைவர்களே பெருங்குடி மக்களே! நமது நகரிலே அழகிய பல நாடகங்களைக் கலையின்பத்துடன் நடத்தி வரும் இக்கலைஞரை நமது ஆத்தானக் கலைஞராக்க வும், அவருக்குக் 'கலைமணி என்ற பட்டத்தைச் சூட்டவும் இசைந்துள்ளோம், அவையோர் எண்ணமென்ன? - எல்லோரும் : அவ்வாறே செய்வோம். வாழ்க கலைமணி 'மூன்று முறை/ வீரசி : கலைமணியே உமது வரவு நல்வரவாகட்டும். அமருங்கள், அன்று தங்களைக் கண்டதிலிருந்து உம்மோடு உரையாட வேண்டுமென்ற ஆவல்