இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எஸ்.டி. சுந்தரம் - 113
ஊர்வ
மணி
ஊர்வ
மனி
ஊர்வ
மணி
ஊர்வ
மணி
ஊர்வ
மணி
ஊர்வ
மணி
ஊர்வ
மணி
ஊர்வ
மணி
ஊர்வ
மணி
உம்மை ஒரு கலைமணி என்று புகழ்ந்து கொள்வ தில் பெருமையடைகின்றீர் அல்லவா?
இல்லை. ஒரு கலைத்தொண்டன் என்று கூறிக் கொள்வதில் பக்தியடைகின்றேன், தாயே!
கலையை ஏன் வளர்க்க வேண்டும்?
காலத்திற்கு அழகு செய்வதால்!
நாடகம் என்றால் பொருள்?
நாகரிகத்தின் அளவுகோல்.
கேட்கத் தகாதது எது?
தகுதியற்ற கேள்வியும் தெளிவில்லாத விடையும்.
சகிக்க முடியாத வேதனை தருவது?
பச்சைக்குழந்தையின் அழுகையும், பத்தினிப் பெண்டிரின் சாபமும்,
இன்பந் தருவது?
குழந்தைகளின் மழலை மொழி.
குணங்களிற் சிறந்தது?
குன்றாத அன்பு
அதற்குப் பொருள்:
அளவற்ற பெரும் பொருள்.
அதன் பிறப்பிடம்.
அன்னையின் இதயபீடம். அனாதை என்றீரே. அன்னையின் அன்பை எப்படி அறிந்தீர்?
அனாதைக்கு உலகெங்கும் அன்னையர்கள், தாயே! -