பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 கவியின் கனவு மணி நல்லோர் ஆசி. சர்வா வழங்கத்தக்கது? மணி வறுமையின் உதவி! சர்வா அஞ்சத்தக்கது. - மணி வஞ்சனைக் கும்பல். சர்வா ஒழிக்கத்தக்கது? மணி ஒயாப்பேச்சு சர்வா வல்லமைமிக்கது? மணி இளமையின் உள்ளம். சர்வா மன்னுயிர் காப்பாது? மணி மாண்புறு வாய்மை, ஆம் பயிர்கட்குப் பருவ மழை, உயிர்கட்குச் சத்தியம் தேவை. நாட்டிலே நாணயம் தேவை! சர்வா குறுக்கத் தக்கது? மணி கோணல் புத்தி, குதர்க்கப்பேச்சு சர்வா வெறுக்கத்தக்கது? மணி துரோகிகள் உறவு; துன்பக்காடு! நாடே காடானால் வீடே நரகானால், நாமெல்லாம் ஏன் வாழ்கிறோம்? எதற்காக வாழ்கிறோம்? என்றே தெரியவில்லை. நாடெங்கும் அலைந்தேன் சிற்றுரெங்கும் சுற்றினேன். மக்களோடு பழகி னேன். நான் கண்ட கசப்பான அனுபவங்கள். அடேயப்பா எத்தனை தலைவர்கள்! எத்தனை ஆயிரம் பேச்சு! அத்தனைக்கும் நடுவேதான் அழிவு ஆனந்த நடனம் ஆடுகிறது. நல்லது உறங்குகிறது. தீமை படமெடுத்தாடுகிறது. உழைப்பு ஒடுங்குகிறது. சோம்பல் சுகமடைகிறது. உண்மை அகால மரணமடைகிறது. பொய்மை பொன்விழா