பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடம் : சிறை காலம் : மாலை (உதவி அமைச்சர் கருணாலயருடன் சுகதேவன் வருகிறான். பல கைதிகளை விடுதலை செய்து விடுகிறான். சில கைதிகளை நிபந்தனையின் பேரில் விடுதலை செய்கிறான். அவரவர்கள் மகிழ்வுடன் வெளியேறுகின்றனர்.) சிர்கதே : கருணா : சுகதே -o கருணாலயரே இங்கிருக்கும் கைதிகளை மிகவும் கண்ணியமாக நடத்தி வாருங்கள். அவ்வப்போது போர் முனைக்கு இங்கு நடக்கும் செய்திகளைத் தெரிவித்துக் கொண்டிருங்கள். நாளை மாலை நான் எல்லைப் போர் முனைக்குப் புறப்படுவ தாகத் திட்டமிட்டிருக்கிறேன். தங்கள் சகோதரியார் கனிமொழி தேவியும் போர் முனைக்கு வருகிறார்கள் என்ற செய்தியே வருத்தத்தைக் கொடுக்கிறது. அதைப் பற்றி ஏன் கவலை? இந்நாட்டில் பிறந்த பெண்களின் வீரச் சேவை, அவசியம் இச் சமயத்தில் நாட்டுக்குப் பயன்பட வேண்டும். மருத்துவப்படையின் பெரும்பகுதியைக் கனி மொழியே தலைமை கொண்டு நடத்த வேண்டும் என்பது என் கட்டளை. ஆருயிர் காக்கும் அறப் பணி! அன்னையர் திருப்பணி! அப்பணியைச் சரிவரச் செய்யும் ஆற்றல் என் தங்கைக்கு உண்டு. தலைவரே! தங்கள் ஆணைகளைச் சிரமேற் கொண்டு அதற்கேற்ப நடப்பதே எமது கடமை. (கவிஞர் ஆனந்தர் வந்து பாட்டுப் பாடி ஆடுகிறார், கடைசியில்)