பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


126. கவியின் கனவு மேன சர்வா சூட்டுகிறேன். உலகுக்கு அவன்! உன் உள்ளத்திற்கு நான். காட்சிக்கு அவன்! காரியத்துக்கு நான். நமதின்ப நாடகம் தொடர்ந்து நடைபெறும். சரி, போ, நிற்காதே, அவனுக்குள்ள பொதுஜனச் செல்வாக்கை உன் அந்தப்புரக் கட்டிலின் கால் களில் கட்டிவைக்கப் போகிறேன்! என் சதுரங்கத் தின் வெட்டுக்காயாக்கி விட்டேன். இந்தத் திட்டமும் வென்றது. இந்திரப்பட்டம் நிச்சயம். மகாகாளி சச்சிதானந்தம். சாமி நீங்களும் ஏதோ கடபுடன்னு பேசிட்டீங்க! நானும் தலையாட்டி விட்டேன். ஆனால், அவன். அவன் என் மந்திரப் பொம்மை சம்மதிப்பான். அதெல்லாம் என் பொறுப்பு நீ மணிவண்ண னிடம் செல் கலைமயமான அவன். ஒளிமயமான உன்னில் லயமயமாகிப் பின்னர் ரசமயமாகி விடுவான். பிறகு பார்த்துக்கொள்வோம். என்ன செய்வது? அரசியல் சூதாட்டத்தில் அந்தப்புர அழகிகளின் உதவி அவசியம் தேவைப்படுகிறது. இதைப் போன்ற கட்டங்கள் இல்லாவிடில் சரித்திரப் பாடம் சாரமற்றதாகி விடுகிறது. ஆகவே, வரலாற்றின் வருங்கால வாழ்வை முன்னிட்டு நடக்கட்டும்! ரசமான காட்சிகள் தொடரட்டும் சதாசிவம் சச்சிதானந்தம்! (്r8 14 ു)