பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இடம் : கனிவன் மாளிகை காலம் : நள்ளிரவு பாத்திரங்கள் : கலைமணி, மணிவண்ணன் இருப்பிடம் (மணிவண்ணன் சோகமாகத் தனது வினோதமான வாழ்க்கை மாற்றத்தைக் குறித்துச் சிந்திக்கிறான். முடிவொன்றும் தோன்றாமல் துயரப்பாட்டுடன் உலவுகிறான். இளவரசி மேனகா, மையல் வெட்டும் கண்களுடனும் திராட்சை ரசத்தையுண்ட மயக்கத்துடனும் வந்து) 6ίρα : நாட்டின் கலைமணியே! வணங்குகின்றேன். மணி : அம்மா! நீங்கள் நாட்டின் இளவரசி, வேந்தரின் புதல்வி, நானோ, ஏழை நாடோடி வணங்குதல் முறையல்ல. மேன : ஆம்; தாங்கள் நாடோடிதான். நாடு தங்களை நோக்கி ஓடோடி வருவதால் தாங்கள் நாடோடி என்பதை ஒப்புக்கொள்கிறேன். உலகம் புகழும் ஒரு கலைஞரை வணங்குகின்றேன். மணி : இங்கு ஏது வந்தது இவ்வேளையில்? மேன : இங்குக் காற்று மிக நன்றாக வீசுகிறது. மணி : எங்குமுள்ள காற்றுத்தான் இங்குமிருக்கிறது. மேன : சில இதுகள் இடத்திற்கேற்றவாறு மாறுவது. இயற்கையல்லவா! மணி : மாற்றம் காண்பதற்கு மனந்தான் காரணம். மேன நல்லாச் சொன்னிங்க, அதனால் புதுமையை நாடி - . வந்த என்னைக் குற்றவாளியாக்கக் கூடாதல்லவா!