பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/137

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


cooroo:o இடம் : பாசறை - படை வீடுகள் 85IT60)6O : LDIT60060 (வீரவுள்ளம் கொண்ட சுகதேவ் நேர் நின்ற எதிரிகளை எதிர்த்ததால் ஒருகை முறிந்துள்ளது. அதற்குப் போட்ட கட்டு அவிழ்க்காத நிலையில், மீதியுள்ள படை வீரர்களைத் துணை சேனாதிபதி உக்கிரசேனர் தலைமையில் துணிவுரை கூறி அனுப்புகிறான். வீரர் அணிவகுத்து நிற்கின்றனர். வெற்றிக்கனல் கொழிக்கும் விழியோடு, வீரச்சுடர் பரப்பும் மொழிகளைப் பொழிந்து நிற்கிறான்.) சர்கதே : நாட்டைக் காக்கும் நல்லன்பர்காள்! மந்திரத்தால் மாங்கனிகள் வீழ்வதில்லை எதிரிகள் தந்திரத் தால் நம் வீரம் தளர்வதில்லை. உயிர் வெறுத்து வந்திருக்கும் வீரத்தின் தோழர்காள் சொந்தத் தால் சில வார்த்தை சொல்லுகின்றேன், கேளுங் கள்! மலர்கள் தோன்றி மறைவது கண்டோம்! மக்களாய்ப் பிறந்தோம்! மடிவது திண்ணம்! தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடும் எதிரிகள் மாய்ந்திடும் வரை நாம் மறப்போம் சுகத்தை; மான்மொன்றின்றி மாற்றார் கொடியில் ஈன முற்றிருக்க எவனோ விரும்புவான்? தாய், பிறன் கைப்படச் சகிப்பவனாகி, நாயென வாழ்வதை விழைவது நன்றோ புன்புலால் யாக்கையைப் போற்றியே, தாய் நாட்டன்பிலா உயிரைத் துரும்பென எண்ணுமின்! அன்னையர் வந்து அழைப் பினும், அவர்தம் கண்ணிர் வெள்ளம் கரை புரண்டோடினும், போர்முனை இதனை விட்டகலாத பேற்றினை நீங்கள் பெரிதென எண்ணி இருப்பவர், என்னுடனிங்கு இருமின்!