பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/138

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


136 கருணா : சுகதே கருணா : சுகதே கருணா: சுகதே கவியின் கனவு வெற்றியே அன்றி வேறெதும் வேண்டேன் வெற்றிக்கீதத்தை வானளாவப் பகர்மின். பகைவ ரெனின் பாம்பெனப் பாய்மின். பாட்டை உணர்ச்சியுடன் تاكاDك 75ييله ) வானோங்கப் பாடி அணிவகுத்துச் செல் கின்றனர். அடுத்தபடியாகத் தலைநகரிலிருந்து கருணாலயர் வருகிறார்) - வாழ்க நம் சேவை! வளர்க நம் வெற்றி! வருக கருணாலயரே! தலைநகரில் வேந்தரும் மற்றையோரும் நலந் தானே? இளஞ்சிங்கம் சேனாதிபதி அவர்களின் பாதுகாப் பிருக்கும் வரை நாட்டின் நலத்துக்கு யாதொரு குறையுமில்லை, அண்ணலே! - சிறை நிர்வாகத்தைச் செவ்வனே நடத்தியிருப்பீர் களென நம்புகிறேன். தலைவரின் புகழைக் காப்பாற்றுவதே என் வாழ்வின் இலட்சியம். கைதிகளின் தண்டனை யைப் படிப்படியாகக் குறைத்தே வருகிறேன். சர்வாதிகாரி மேலும் மேலும் அரசரின் பெயரால் குற்றவாளிகளைத் துக்குத் தண்டனை கொடுத்து அனுப்பிக் கொண்டேயிருக்கிறார். அப்படியா! நான் போர் முடித்துத் திரும்பி வரும்வரை மரண தண்டனைகளை நிறைவேற்ற வேண்டாம். ஆமாம்! பித்தர் சிறை முகாமில் ஆனந்தர் என்ற பெயருடன் ஒரு கைதி அடை பட்டுக் கிடந்தாரே! அவருக்கு நான் கூறியபடி சிகிச்சை செய்து பார்த்தீர்களா? ஏதேனும் மாறுதல் ஏற்பட்டிருக்கிறதா அவர் நிலையில்? . மாறுதல் எதுவுமில்லை அடிக்கடி சாந்தி. சாந்தி என்று கதறி அழுது அங்கலாய்க்கிறார்.