பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 கார் சுகதே கார் கனி சுகதே கனி சுகதே கவியின் கனவு நெறைய உண்டுங்க, எசமான். அரண்மனையிலே கனிவன மாளிகையிலே சதா அழுதுகிட்டே - இல்லீங்க - அவர்தானுங்க, அந்த நாடகக்கார அய்யா. ஆமாம் - மணிவண்ணனும் அவன் தங்கையும். அவங்கதானுங்க இந்த ஒலையை உங்ககிட்டே கொடுத்துட்டு வரச்சொன்னாங்க! (கனிமொழி வாங்க சதா உங்க நினைவாகவே இருக்காங்க, எசமான்! (ஒலையைப் பிரித்துப் பார்த்து அண்ணா, அவர் தான் உங்களுக்கு எழுதியிருக்கிறார். இதோ பாருங்கள் - . (அலட்சியமாக, உம். இனி என்ன எழுதியும் என்ன பலன்! முறிந்த மனம் ஒன்றுகூடப் போவதில்லை. படி, படி (படிக்கிறாள், “அன்புமிக்க நண்பரே! எமது விதியின் பயணம், எதிர்பாராத பாலை நிலத்துக்கு இட்டுச் செல்லப்படுகிறது. சூதும் சூழ்ச்சியும் நிறைந்த சோதனை நரகிலே அமைதி யின்றி வாழ்கிறோம். செயலற்ற சவங்களாகி விட்டோம். தப்பும் வழிக்கும் சர்வாதிகாரி தடை செய்கிறான். திருமணத்திற்குமுன் ஒலிக்கும் வாத்தியங்கள் எம் காதில் மரணகீதம் போல் பாய்கின்றன. தங்கள் உதவியால் மீள விரும்பும் மணிவண்ணன் - சாந்தி' (கவனித்துக் கொண்டே, வெகுண்டு வெட்கங் கெட்ட வேலை இளவரசியின் திருமணத்தை, சபையறிய, பெருங்குடி மக்கள் ஆமோதித்து, அழைப்பிதழ்களும் அனுப்பப்பட்டு விட்டன. இனிமேல் நான் இதில் தலையிட்டால், சுகதேவன் சுயநலங்கொண்டவன் என்று நாடே இழிவு படுத்தும் நாளை. மேலும், பகைவனின் படைகள்