எஸ்.டி. சுந்தரம் 13
யான ராஜகுருவிடம் ஒப்படைத்துவிட்டு, அரண்மனைத் திருவிழாக் களிலும், சுற்றுலா இன்பங்களிலும் மலை முகடுகளிலும், சாரல் மாளிகைகளிலும் தங்கள் நேரத்தைக் கழித்து வருகின்றனர்.
மகாகவி ஆனந்தன், முன்பு ஊர்வசியின் வஞ்சனையால் கொல்லப்பட்ட தனது அருமை மனைவி வாணியின் ஒரே செல்வமான சாந்தி என்ற ஆறு வயது பெண் குழந்தையையும் வளர்ப்பு மைந்தன் மணிவண்ணனையும் கண்ணின் கருமணி போல் காப்பாற்றி வளர்த்து வருகிறான்.
அத்துடன் அவன் நிற்கவில்லை. மக்களை நல்லவர்க ளாக்கும் பெரும் பொறுப்பிலும் ஈடுபடுகிறான். ஊர் ஊராக, கிராமம் கிராமமாகச் சுற்றித் திரிந்து அறிவொளியைப் பரப்பி வருகிறான். வீழ்ந்த மக்களை வீரர்களாக்குகிறான். பாட்டுத் திறத்தாலே இவ் வையத்தைப் பாலிக்கச் செய்கிறான். ஒருபெரும் சத்திய சோதனை யில் இறங்குகிறான். வாய்மையின் வெற்றிக்கு மெய்மையின் வலிவை நம்புகிறான். தூய்மைப் போரில் தன்னுயிரைப் பணயம் வைக்கிறான்.
இந்தச் செய்தி மன்னன் காதில் விழுகிறது. ஆனந்தனைத் தனது ஆலோசகனாக இருக்கும்படி கேட்டுப் பார்க்கிறான். ஆனந்தன் மறுத்துவிடுகிறான். இராணி ஊர்வசியும் தனித்து அவனைச் சந்தித்துத் தனது இளம்பருவக் கனவுகளை இன்ப ஒவியங்களாகத் தீட்டிக் காட்டுகிறாள். தனது இதயக் காணிக்கையை ஏற்றுக்கொண்டு நிம்மதியாக வாழ்ந்து, இன்பக் கலைகளை வளர்க்க வேண்டுகிறாள். .
இலட்சியக் கவிஞனின் சத்திய இதயம் சத்தற்ற சொத்தைக் கும்பலின் போலிப் பதவிகளை ஏற்க மறுக்கிறது. சர்வாதிகாரிக்குச் சினம் வருகிறது. ஆனந்தனது நல்ல முயற்சிக்கு முடிவுகட்ட விரும்புகிறான். இச்சகம் பாடிப் பிழைக்கும் தன்னலக் கூட்டத்திற் குத் தலைமை தாங்கச் சொல்லுகிறான். கவிஞன் மறுக்கிறான். தனது இலட்சியத்தின் கருவூலமாகக் 'கனவு’ என்னும் நாடகத்தை எழுதுகிறான். அது அவனது ஆத்மாவின் துடிப்பாக அமைகிறது. உலகுக்கு ஒரு உயிருள்ள நாடக இலக்கியம் கிடைக்கிறது.
பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/15
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
