பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடம் : மணிவண்ணன் மாளிகை காலம் : இரவு (மணிவண்ணன் கலக்கத்துடன் உலவுகிறான்) βιρε" : (வந்து உங்கள் எண்ணப்படிதான் கலியாணம் நடந்துவிட்டதே. இனியும் என்னைப் பார்க்க என்ன வெட்கம் உங்களுக்கு? மணி : பெண்ணே உன்னைப் பார்க்கப் பரிதாபமா யிருக்கிறது. மேன : சரி. வாருங்கள், துணைவரே! என் இளமை. மணி : சீ. நானல்ல உன் கணவன். சர்வாதிகாரியின் சதி நீ என் தங்கை சாந்தி எங்கே? மேன : சாந்தி என் அறையில் இருக்கிறாள். மணி : கனிமொழி எந்தச் சிறையிலிருக்கிறாள்? மேன : நானிருக்கையில் அவளை நினைப்பது பாவ மல்லவா, நாதா? மணி : சீ குடிவெறியில் உளறாதே கண்களைப் பார். மேன : கண்ணைப்பற்றிக் கவலையென்ன! ஆட்டின் கண்கள் அழகாயில்லை என்பதற்காக, அதை உண்ணாமலா விட்டுவிடுகிறார்கள்? (நெருங்குகிறாள். அவன் தள்ளுகிறான்) மன : ஒகோ அரசிளங்குமரியாகிய நான் இவ்வாறு நெருங்கி வந்தும் அலட்சியமா செய்கிறீர்!