பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 163 நரசி கவி ஆறு கவி உலாவி வருகிறார். இவர்கள் பேசுவதைக் கவனிக்கிறார்) அடே, ஆறுமுகம் இதோ உன் நண்பர். (ஆறுமுகத்தைப் பார்த்து நெருங்கி ஆ. ஆறு முகமாக இவரா ஆறுமுகம் ஆகா முந்து தமிழ் மாலையணிந்த பெருமாளே வரவேணும், வர வேணும். ஒரு முகந்தானா உமக்கு? மீதி ஐந்து முகங்களை எங்கே கழற்றி வைத்தீர்கள்? சொல்லுங்கள். வைத்த இடத்தை, ஓ! சரவணப் பொய்கையிலிருந்து சுமந்து வரக் கஷ்டமா யிருந்ததோ! ஏறுமயில் எங்கே? கூவிய கோழி எங்கே? பத்தினி வள்ளி எங்கே? பிரேமையின் தேவயானை எங்கே? பொன்வடிவேலுமெங்கே? (நெருங்கிப் பாதத்தை வணங்குகிறார்) அடே நரசிம்மா, என்னடா இது? பயமா யிருக்குடா புடிடா இவரை! வீரன் (நரசிம்மனிடம் திரும்பி) ஆ! நரசிம்ம மூர்த்தியா ஆகா! இரணியனைப் பிளந்த கோளரியே வணக்கம். நரமிருக அவதாரமே! அன்று உமது சிங்க முகத்தில் தோன்றிய கோபம் இன்றும் இருக்கிறதே! (ஈட்டியைப் பார்த்து/ இதேது? ஒ! பரசுராம அவதாரத்தில் ஏந்திய கலப்பையா இது - ஆ. ஆனந்தம் ஆனந்தம் இது யார்? இதிகாச இராவணனோ? நான் யார்? குறட்டையில் கும்பகர்ணனோ? ஆம். நெடிய உறக்கம்! இன்னும் சீதையைச் சிறை மீட்க வில்லையா? நல்லவர் சிரிக்கவில்லையா? ஆனதோ வெஞ்சமர்; அலகில் கற்புடைய சானகி துயர் இன்னும் தவிர்ந்ததிலையே; போனதோ அரக்கர் தம் புகழும் ஆண்மையும். நானிதோ போகிறேன். விடையும் கொள்கிறேன். வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும், ஆரன