பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் . 167 கனி விதியை வெல்வோம் நாம். வீண்துரயம் ஏனோ? வீண்துயரம் ஏனோ? (விதி) வானமதி இரவியைப் போலே ஞான ஒளியே பெறுவோமே! வீணையொலி குழலிசையாலே கீதமது எழுவது போலே மோனமா மனதால் நாதமறிவோமே! (விதி) (மேற்படி பாட்டைத் திரும்பத் திரும்பிப் பாடும் போது ஏதோ ஒரு புதையவைக் கண்டு மிரள் வதைப் போல் பழங்கனவுகளையெல்லாம் எண்ணிப் பார்க்க முயற்சி செய்கின்றார் சிந்திக் கின்றார். ஏதோ முணுமுணுக்கிறார்) இதோ ஏதோ, சொல்லப் பார்க்கிறார். சரி தொடர்ந்து பாடுவோம். (பாட்டின் தொடர்ச்சி) (கடைசி அடியும் பாடுகிறார்கள். கவி அரை குறையாகப் பாட முயல்கிறார்) தாயெனவே நமைப்பா விக்கும் தாயகமே தாரக மென்போம் வாழி நேச தேசம் வாழி நலம்சூழ. மாயை எனும் இருளதனாலே மானிடனே மதி மயங்காதே வாழ்க நேச தேசம் வாழி நலம் சூழ (இந்த வரிகளை மட்டும் கவிஞர் ஒரு எழுத்து விட7மல் பன்முறையும் பாடித் திகைத்து ஆடித் தெளிந்து படிப்படியாகப் பைத்தியம் நீங்கிப் பின் நல்வ நிலை ஏற்படத் திடீரென உரத்த குரலில் அந்தச் சிறையெல்லாம் எதிரொவி செய்யக் கதறுகிறார்) . . .