பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ்.டி. சுந்தரம் - 15 வாழலாம் என்ற தனது ஆசைச்சாம்பலால் புதிய கனலை மூட்ட முயல்கிறாள். தேசாதிபதிகள் எல்லாம் தன் காலில் விழும் அழகு படைத்த அவள், ஒரு ஏழைக் கவியான காவற்கைதியின் காலில் விழுந்து கெஞ்சுகிறாள். அவனிடம் கற்ற கலைகளை யெல்லாம் நினைவுபடுத்துகிறாள். கடைசியாக, அவன் மீளவே முடியாத ஒரு பைத்தியம் என்று அறிந்து மிகவும் கவலைப்படுகிறாள். காலம் சுழல்கிறது பதினைந்து ஆண்டுகள் பறக்கின்றன. எங்கோ ஒரு சிற்றுார். அனாதைகளான குழந்தைகள் தெருப் பாடகர்களாய் வளர்க்கப்படுகின்றனர். தெருக்கூத்துக் கிழவன் ஒருவன். அந்தக் குழந்தைகளின் கலை ஞானத்தையறிந்து, அவர்களுக்கு நடனம், பாடல், நாடகம் எல்லாம் சொல்லிக் கொடுக்கிறான். ஊர் ஊராக நாடோடிகளாக அலைந்து வந்த அவர்களுக்குக் 'கனவு’ என்ற தலைப்பிட்ட ஒரு பழைய நாடகச் சுவடி கிடைக்கிறது. அதை நாடகமாக நடத்தும் முயற்சியில் ஈடு படுகிறார்கள். நாடு போற்றும் நாடகக் கலைஞர்களாக விளங்கு கிறார்கள். சாந்தியும் அவள் சகோதரன் மணிவண்ணனும் தலைநகர் அரண்மனையில் இளவரசி மேனகையின் பிறந்த தின விழா. எழிலரசி ராணி ஊர்வசி நாட்டியமாடுகிறாள். அவள் நடன விழாவைக் கண்டு அவையே மெய்ம்மறந்திருக்கிறது. எல்லோரும் மகாராணியின் கலைத் திறமையைப் புகழ்ந்து பேசுகின்றனர். ஆனால், நாட்டின் இளம் சேனாதிபதி சுகதேவன் மட்டும், தான் இதைவிட ஒரு உயர்ந்த கலையின்பத்தைத் தலைநகரில் வந்திருக்கும் ஏழைக் கலைஞரிடம் கண்டதாகக் கூறுகிறான். -- மகாராணியின் மனம் வேதனைப்படுகிறது. தன்னைவிட உயர்ந்த கலைஞர்கள் எந்த நாட்டிலும் இருக்க முடியாதென்ற அகந்தையால் தலை கனத்திருந்த மகாராணிக்குச் சுகதேவனின்