பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 - - கவியின் கனவு இந்தச் சொல் இடி விழுந்தது போன்ற அதிர்ச்சியைக் கொடுக்கிறது. அந்த நாட்டியத்தையும், நாடகக் கலைஞர்களையும் காணத் துடிப்பாகக் கூறுகிறாள், மன்னன் அதற்கு வேண்டியவற்றைச் செய்கிறான், ஏழைகளின் கலை மன்றத்தில் எழில் கொண்டு ஆடுகிறது கலையின்பம். அதைக் கண்டு அரண்மனையின் அகந்தை ஆவேசப்படுகிறது. - - அவர்கள் நடித்த நாடகத்தின் உட்பொருள். ராணி ஊர்வசி யைத் திகைக்க வைக்கிறது! இது நாள்வரை உறங்கிக் கிடந்த அவளது மான உலக வாழ்வு இன்பமாக முன்னேறும் என்று கூறுகிறார். உன் மனத்தில் ஒளி நிழல்கள் உயிர் கொண்டு விளையாடி அவளுக்கு எதிராகவே எதிர்க்கொடி காட்டுகின்றன. திகைக்க வைக்கிறது ராஜாவின் உள்ளத்தைத் திணற வைக்கிறது. கலைமணிகள் நடத்தும் புரட்சி நாடகம். மக்கள் மனத்தை மாற்றி விடும் என்று அஞ்சுகிறது. ராஜதந்திரம் அந்தக் கலைஞர்களை அரண்மனைச் சோம்பேறிகளாக்கி, அதன் மூலம் கலையைச் சிறையிட ராஜாவும், சர்வாதிகாரியும் சதி செய்கின்றனர். "இளம் சேனாதிபதி சுகதேவனும், அவன் தங்கை கனி மொழியும் கலைஞர்களைத் தங்கள் வீட்டிற்கு அழைத்து உபசரிக்கின்றனர். நெருங்கிய நண்பர்களாகின்றனர். உயிர்த் தோழர்களாவதோடு உள்ளங்களையும் பரிமாறிக் கொள்கின்றனர். இந்நிலையில் அரசனது அழைப்பு வருகிறது. சர்வாதிகாரியின் நச்சுப் பார்வை சாந்தியின்மீது விழுகிறது. அதனால் அவன் சுகதேவைத் தலைநகரில் இருந்து எல்லைப்புரத்திற்கு அனுப்பும் படியான சதியைச் செய்கிறான். எல்லையில் வேண்டுமென்றே தனது கொள்ளைக் கூட்டத்தை ஏவி, தொல்லைப் போர்களை விளைவிக்கிறான் சர்வாதிகாரி நாட்டின் எல்லையைக் காப்பதற்காகச் சுகதேவன் தலைநகரைவிட்டுப் போர்க்களத்திற்குச் செல்கிறான். போகும் போது, தனது நிர்வாகத்தில் இருந்த பாதாளச் சிறையில் அவதிப்படும் கைதிகளை அதிகம் துன்புறுத்தாமல் பார்த்துக் கொள்ளும்படி தன் துணைத் தலைவரிடம் சொல்லி விட்டு, சுகதேவ் எல்லைப்புறத்தில்