பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 கவியின் கனவு வீரசி ஊர்வ கார் வீரசி முற்றுகையிடப்படும்" சீ. சிற்றின்பப் பேயே! உன்னிடம் நான் அனுபவித்தற்கு இன்பமென்றா பெயர்: சீச்சி. ஆ உன் கூட்டுறவால் நான் செய்த கொலைகள் அனந்தம். ஒரு நாளாவது நான் ஆறுதலோடு இருந்ததுண்டா? எங்கும் சர்வநாசம் எல்லையற்ற மோசம்! நாதா நமது பெயரும் புகழுங்கூடச் சரித்திரத்தில் இடம் பெறும். இராவணனும் துரியோதனனும் இந்திரனும் இல்லாவிட்டால் இதிகாசங்கள் சுவையுள்ள காவியங்களாயிருக்குமா? தீமை யில்லா விட்டால் நன்மைக்கு மதிப்பேது? தம் போன்ற கயவர்களை சிருஷ்டிக்காவிட்டால் கவிஞர்களுக்குத்தான் புகழேது? வீணில் வருந்தா மல் இதை அருந்துங்கள். இரவு நடு இரவு சமயம் பார்த்துப் பேப் வேடத்துடன் கார்மேகம் குதித்து வீரசிம்மா! இதோ, சுகதேவின் கடிதம். உண்மையை ஒப்புக்கொள். எங்குச் சென்றாலும் தொடருவேன். உன் நாட்டுக்குத் துரோகம் செய்யாதே ஊர்வசியை நம்பாதே! (கடிதத்தை எறித்துவிட்டு மறைகிறான்) (பயந்து பதறி, நடுங்கி அதைப் படிக்கிறான்) "வேந்தே அநீதி நிலைக்காது. சத்தியம் வென்றது. தாங்கள் என்னிடம் உண்மையை ஒப்புக்கொண்டு அரசியல்ை விட்டுவிடவேண்டும். இன்றேல், உம தண்ணன் மகன் அமரநாதனுடன் அரண்மனை இப்படிக்கு, - சுகதேவன். ஆம்! நான் எண்ணியது முற்றிலும் சரி. எனது அண்ணன் மகன் இருபது ஆண்டுகளாகவா பிழைத்திருந்தான்!