எஸ்.டி. சுந்தரம் - - 183
இடம் : விசாரணை மண்டபம்
காலம் : பகல்
(மகாகவி, இளவரசன் அமரநாதன், சுகதேவன், கார்மேகன் மற்றும் பலர் கூடி நிற்கிறார்கள். வீரர்கள் சர்வாதிகாரியை விலங்கிட்டு, அழைத்து வருகின்றனர். ஏற்கெனவே வீரருடன் போரிட்டதால் அவனது கொழுத்த மண்டையின் பல இடங்களிலிருந்து இரத்தம் ஒழுகிக் கொண்டிருக்கிறது. மாமிசப் பசிகொண்டு தன் முகத்தைத் தானே கிழித்து, தன் இரத்தத்தைத் தானே சுவைத்துப் பருகும் ஒருவெறிப் புலி போல் காட்சி யளிக்கின்றான். அவனது அலங்காரங்களெல்லாம், நீக்கப் படுகின்றன. அவனைக் கொலைக் குற்றத்திற்காக விசாரிக்க வேண்டுமென மக்கள் கொதித்துக் கூறுகின்றனர்.)
பெருங்குடி1 : இம் மாபாதகனை உடனே கழுவிலேற்றிக்
கொல்ல வேண்டும், அரசே!
ப்ெருங்குடி2 : இவனது குள்ள நரி வஞ்சகத்தையும் ஒநாய்
சுகவே :
கவி
இதயத்தையும் எடுத்துக் காட்சிச் சாலையில்
வைக்க வேண்டும் தளபதி! - பாதகத்தின் பிறப்பிடமே! கொடுமையின் இருப்பிடமே! சென்ற மகா யுத்தத்தில் நீ பனி நாட்டுப் பகைவருடன் கூடி ஒரு அந்நியனாகவே மாறி, இந்நாட்டின் சக்கரவர்த்தியான ஆத்மநாதப் பிரபுவையும், தளபதி சத்யதேவரையும் கொன்று, கடந்த இருபது ஆண்டுகளாக, நம் நாட்டையும் பண்பாட்டையும் நாசமாக்கின. குற்றத்தை உன்மீது சாட்டுகின்றோம். மனிதா! நீ செய்த குற்றத்தையெல்லாம் ஒளிக்கா மல் நீதியின் முன்னிலையில் ஒப்புக்கொண்டு, உண்மையைக் காண வழி தேடுவதே தர்மம்.
பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/185
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
