பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/188

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


186 கவியின் கனவு மணி பெ.கு. 1: பெ.கு.2 : பெ.கு.3 : சுகதே சர்வா சுகதே மன்னித்துவிடலாம். பாவம்! அவனும் இந்த மண்ணில் பிறந்தவன்! . மக்களே! இந்தத் தேசத் துரோகியை என்ன செய்யலாம்? - : கணக்கற்ற பெண்டிரைக் கற்பழித்த இக்கயவனின் கண்களைப் பிடிங்க வேண்டும், அரசே! அரசியலின் பேரால் நாட்டை ஏமாற்றினான். அக்கிரமத்தின் பேரால் அறிவைச் சூனியமாக் கினான். இவன் ஒரு இரட்டைத் தலைப்பாம்பு பத்துத் தலைப்புவி பொய்மையே கூறின புழுத்த இவன் நாக்கினை வெட்டித் தீயிட வேண்டும், நூறு கூறுகளாக. ஏதேதோ கூறி, எங்கள் செல்வங்களைக் கொள்ளை யடித்த இவனை எண்ணாயிரம் ஊசிகளால் குத்தி, எண்ணெய் கொப்பறையில் தள்ள வேண்டும். - மந்திர மாந்திரிகமென்றும், சீர்திருத்தமென்றும் நாட்டையே வதை செய்த இந்த அதிசய மனிதனை, நடத்தையற்ற அநாகரிகப் பிறவியைக் கொன்று இவன் இதயத்தையும் மூளையையும் காட்சிச் சாலையில் வைக்க வேண்டும், அரசே, (சர்வாதிகாரி சிறிதும் பொருட்படுத்தாது கிரிக்கின்றான்) - இந்நிலையிலும் என்னடா சிரிப்பு? அடே! நீ கொள்ளையடித்த பொது மக்களின் செல்வங் களை யெல்லாம் எங்கே ஒளித்து வைத்திருக் கிறாய்? - அதைப்பற்றிய ஒரு வார்த்தையும் என் வாயி லிருந்து வராது. . அப்படியா வீரர்களே, இவனைச் சித்திரவதை செய்து உண்மையை வரவழையுங்கள். (சவுக்கடிகளால் மேலெல்லாம் இரத்தம் கசிய)