பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/193

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ்.டி. சுந்தரம் 191 இடம் : ஆசிரமம் (மகாகவி ஆனந்தர் ஒளிப்பிழம்பையும் 'ஓம்' என்ற மந்திரத்தையும் பணிந்து நிற்கின்றார். மக்கள் சூழ்ந்து மணமலர்களை அவர் பாதங்களில் சூட்டுகின்றார்கள். அதைப் பணிவோடு தடுக்கின்றார்) (குடியரசின் தலைவர் கவியரசர் வாழ்க! என்ற வாழ்த்தொலி கள் வானைப் பிளக்கின்றன) (இளந்தம்பதிகள் இருவரும் (கனிமொழி - மணிவண்ணன், சுகதேவன் - சாந்தி) நாட்டுச் சரித்திரத்தின் மாற்றத்திற்கே காரணமாக ’கனவு’ என்ற அந்நாடகச் சுவடியை ஒளிப்பிழம்பின் முன் வைத்து வணங்கிப் பின் வரும் பாட்டைப் பாடுகின்றனர்) பாடல் விதியை வெல்வோம் நாம் வீண்துயரம் ஏனோ? வீண்துயரம் ஏனோ? (விதியை) வான மதி இரவியைப் போலே ஞானஒளியே பெறுவோமே! வீணை ஒலிகுழலிசை யாலே கீதமது எழுவது போலே மோனமா மனதால் நாதமறிவோமே (விதியை) கவிஞர் : விதியை வென்றோம் நாம் வீண் துயரம் வேண்டாம் வீண் துயரம் வேண்டாம்