பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 கவியின் கனவு ஆனால், அவர்கள் முயற்சி தோல்வியுறச் செய்கிறான் சர்வாதிகாரி. கடைசியாக, கார்மேகன் என்ற அரண்மனை ஒற்றன் மூலமாக மணிவண்ணன், சுகதேவுக்குத் தனது தர்மசங்கடமான நிலையைப் பற்றிச் செய்தி அனுப்புகிறான். o எல்லைப்புறப் போர்க்களம்! பாசறை கார்மேகன் மணிவண்ணனிடமிருந்து செய்தி கொண்டு வருகிறான். கனிமொழி உடனே அரண்மனைச் சதியிலிருந்து கலைஞர்களை மீட்கவேண்டும் என்று அண்ணனைக் கெஞ்சு கிறாள். ஆனால், சுகதேவ் தன்னால் தற்பொழுது எல்லையை விட்டுப்போக முடியாது என்று கூறுகிறான். அப்படியானால் தானே போய் வருவதாக அண்ணனிடம் வாழத்திதழைப் பெற்றுக் கொண்டு தகுந்த பாதுகாப்புடன் கனிமொழி தலைநகருக்குப் போகிறாள். - திருமணம் நடைபெற, கொஞ்ச நேரம் இருக்கிறது. மணமகன் கலங்கி நிற்கிறான். மணமகள் குழப்பத்தோடு நிற்கிறாள். சர்வாதிகாரி தன் சதி எண்ணம் நிறைவேறி விடும் என்ற அற்பச் சிரிப்புடன் மகிழ்கிறான். அந்த நேரத்தில் சேனாதிபதியின் தங்கை கனிமொழி வருகிறாள். வந்ததும் அவள் கையிலிருந்த மாலையை மணமகள் கழுத்தில் போட்டு, சேனாதிபதியின் வாழ்த்தைப் படிக்கிறாள். மணமகனும் தன் கையிலிருந்த மாலையை அவள் கழுத்தில் போட்டு விடுகிறான். இப்படி ஒரு எதிர்பாராத ஒரு குழப்பத்துக்குக் காரணமான கனிமொழியை மகாராணி ஊர்வசி குற்றவாளி ஆக்குகிறாள். சர்வாதிகாரி கனிமொழியைப் பாதாளச் சிறைக்கூடத்துக்கு அனுப்புகிறான். கலைஞன் மணிவண்ணன் சர்வாதிகாரி மீது பாய்கிறான். மணிவண்ணனது மணப்பேச்சைப் பொறுக்க முடியாமல் அவனை யும் சிறைக்கு அனுப்பி விடுகிறான்.