பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


20 . கவியின் கனவு அவரே என்பதையும் எல்லோருக்கும் அவரே மெதுவாக எடுத்துச் சொல்லுகிறார். மங்கிப் போயிருந்த வரலாற்றின் மறுபதிப்பைக்' கேட்கிறார்கள். அரண்மனையில், தனது ஈனச் செயலால் ஏமாற்றமடைந்த இளவரசி மேனகா தற்கொலை செய்துகொண்டு. அதற்குக் காரணமாயிருந்தவன் சர்வாதிகாரியே என்று கடிதம் எழுதித் தன் தந்தைக்கு அனுப்பி விடுகிறாள். அரசன் இதைப் பார்த்ததும் சர்வாதிகாரியைத் தண்டிக்கப் போகையில் ராணி ஊர்வசி தடுக்கிறாள். இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருக்கையில் சிறையிலிருந்து சுகதேவனின் தலைமையில் வீரர்கள் வருகின்றனர். அரண்மனை இரகசியம் விளக்கப்படுகிறது. மணிவண்ணன் காலஞ்சென்ற மன்னனின் மகன் என்பதையும் தெளிவாக்கு கிறார்கள். முன் தப்பிச் சென்ற சர்வாதிகாரி, மக்களைத் தன்பக்கம் சேர்க்கிறான். 'அந்தக் கிழட்டுக் கவிஞன் நாட்டின் இரகசியக் கருவூலத்தை மறைத்து வைத்திருக்கிறான். அதை மறைக்க ஏதோ கதை கட்டுகிறான் என்று சர்வாதிகாரி ஒரு பொய் வதந்தியை மக்கள் மத்தியில் பரப்புகிறான். மக்கள் எல்லோரும் அந்தச் செல்வம் என்ன என்பதை அறியத் துடிக்கின்றனர். கவி ஆன்ந்தர் மக்கள் ஆசையை நிறைவேற்ற மலைக்கோயில் சுரங்கத்துக்கு எல்லோரையும் அழைத்துச் செல்கிறார். r "காலஞ்சென்ற மன்னர் என்னிடம் ஒப்படைத்த இரண்டு செல்வங்களில் ஒன்று அரச குமாரன் மணிவண்ணன் மற்றொன்று, குகைக்கோயில் சுரங்கத்தில் உள்ள இந்நாட்டில் புதிய அரசியலைப் பற்றி நூல்கள். அந்த நீதி நூல்களே இந்நாட்டின் நிலையான செல்வங்கள். மகாகவிஞர்கள் கண்ட இலட்சியக் கனவுகள் அதை வாழ்க்கையில் நனவாக்கிச் செயலாக நிலைநாட்டினால் துன்பம் தீரும் இன்பம் பெருகும்” என்று கூறுகிறார். 'இவையே நமது ஆன்றோர்கள் நமக்காக விட்டு வைத்த அரிய செல்வங்கள். இந்தச் செல்வங்களை நமது நல்ல நடத்தை