பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ti.4. சுந்தரம் 27 சர்வா கண்டா : சர்வா கண்டா : சர்வா கண்டா : பண்றான். என்னா பேச்சு பேசறான். என்னா கவி பாட்றான்! மக்கள் அவன் பேசறதைக் கேட்டா மகுடியில் கட்டுண்ட பாம்புங்க மாதிரி மயங்கிப் புடறாங்க. என்னை எதிர்த்துப் பேசும் ஆள் இருக்கிறானா இந்நாட்டில்? உங்களை மட்டுமா எதுக்கிறான்? அவன் என்னை யும் சேர்த்து எதுக்குறாங்க, சாமி! இந்த நாட்டிலே உங்களை எதுக்கிற ஒரே ஆசாமி அவன்தானுங்க. பாருங்க, அவன் உங்களுக்கு எழுதியிருக்கிற பதிலை. (ஏட்டைப் படித்தவண்ணமாக, “அழியும் உன்னை அமரகவி பாடமாட்டான்' முட்டாள்! வாழ்வதற்கு வழி சொன்னேன்! வறியனுக்குப் புரியவில்லை; அரசவைக் கவிஞன் என்றேன்! அனுபவிக்கத் தெரியவில்லை. என்னை அவன் மிரட்டுவதா? சூரியனை இருட்டு மிரட்டுகிறது! ஆமாங்க. கோடை இடியை ஒரு சின்னக் குருக்கத்திக் கொடிவந்து மிரட்டுதுங்க! - கோபுரத்தைக் குப்பை மிரட்டுதுங்க. அவன் சொல்றான், வீரசுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்றும் கொள்வாரோ. வேடிக்கை. இனி ஒரு விதி செய்வோம். அதை எந்த நாளும் காப்போம், 'தனி ஒருவனுக்குண விலையெனில் உலகினை அழித்திடுவோம்’ இவன் அழிவைத் தெரிந்து கொள்ளவில்லை! உலகை அழிக்கப் புறப்பட்டு விட்டான். விதியை எதிர்க்கிறான். விளையாட நினைக்கிறான். ஆகா! (வெடிச் சிரிப்பு) சாமி! நாட்டு மக்கள் அந்தக் கவி மேலே எவ்வளவு அன்பு வச்சிருக்காங்க தெரியுமா?