பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


28 சர்வா கண்டா : சர்வா. கவியின் கனவு நாட்டு மக்கள்! செம்மறி ஆட்டு மந்தைகள்! கண்டாகர்ணா! உடனே சென்று நமது வேந்தரின் மெய்க் காவற்படையினரை அனுப்பி, அந்தப் புரட்சிக் கவிஞனைப் பிடித்துவந்து பாதாளச் சிறையில் போடும்படி நான் ஆணையிட்டதாகக் கூறு - போ! சாமி, நீங்க சொல்றது அவ்வளவு எளிமையான காரியமில்லிங்க. அந்த. கவியிருக்கானே! அவன் செல்வாக்குள்ள ஆளுங்க! என்ன உளறுகிறாய்! எலியைக் கண்டு புலி அஞ்ச லாமா? அவனைப் பார்த்து நீ நடுங்கலாமா? உம். புறப்படு. நானும் உங்கள் பின்னாலேயே வருவேன். உம் போ - அஞ்சாதே. நானிருக்கப் பயமேன். மகாகாளி: சதாசிவம்! (காசி முடிவு)