பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 கவியின் கனவு மாணவன் கவி பாட்டு மக்கள் நல்வாழ்வைப் பெறுவார்கள்? வானளா விய உயர் மலைகள்! வற்றாத உயிர் நதிகள்! இனிய வயல்கள்! நெடிய பொழில்கள்! வானம் பொழிகிறது! பயிர் செழிக்கிறது! வளம் கொழிக் கிறது! எனினும் எனது நாட்டை வறுமையும், மடமையும் பிடித்து வாட்டுகின்றன. பசியும் பிணியும் புயல் போல் சூழ்கின்றன! கவலை, விடம் போல் ஏறுகிறது. அரசரோ சர்வாதி காரியின் கைப்பாவையாக ஆடுகிறார். ஏழ்மை திகைக்கிறது! இதயம் துடிக்கிறது! அதிகாரம் அலட்சியப்படுத்துகிறது! நிர்வாகம் நிமிர முடி யாமல் கூனலாகிவிட்டது. மக்கள் மாக்களா கிறார்கள். நியாயங்கள் நடுங்குகின்றன. சிறுமை கள் சிங்காதனமேறுகின்றன. தருமங்கள் திகைத்து ஒடுகின்றன. அறங்கள் கல்லறைகளாகின்றன! பச்சை மரங்களைப் பற்றி எரிக்கிறார்கள்! பட்ட மரங்களுக்குப் பாலுாற்றிப் பூசை செய்கிறார்கள்

ஆமாங்கய்யா, நம்ம ராசாவோ அந்தப்புரமே கதின்னு கெடக்கிறாரு சனங்களோ சொந்தப் புரமே கதின்னு இருக்கிறாங்க. நானும் எந்தப் புரத்திற்குப் போறதுன்னு புரியாம தவிக்கிறேன். என்ன பண்றதுங்க? எல்லாம் விதிங்க.

விதி அந்த விதியை மனிதன் மதியால் வென்றே தீர வேண்டும், தம்பி, (ஒடையின் சலசலப்பு. பறவைகளின் இனிய ஒலிகள் கொஞ்சிக் குலவிப் பாடும் குயில் ஒசையைத் தொடர்ந்து இசை மெருகுடன் கவிஞனின் இதயப் பாடல் துவங்குகிறது) விதியை வெல்வோம் நாம் வீண்துயரம் ஏனோ? வீண்துயரம் ஏனோ? (விதியை)