பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ்.டி. சுந்தரம் 38 கவி என் உயிருக்கு நான் என்றுமே அஞ்சியதில்லை, தம்பி. ஆம், என்று, என் அருமைத் துணைவி வாணி என்னைவிட்டுப் பிரிந்தாளோ, அன்றே என் உயிரின் மீதிருந்த ஆசையெல்லாம் அற்றுப் போய்விட்டது தம்பி! ஆயுதப் புரட்சி வேண்டு மென்று அரைக்கணத்தில் முடிவெடுத்து விடு வேன். அனால் அந்தப் புரட்சிக்கு ஏற்ற துணிச்சல் நாட்டு மக்களுக்கில்லை. மேலும் உணர்ச்சி வசப்பட்டு திடீரெனத் துவங்கும் ஆயுதப் புரட்சி என்பது, ஒரு வாணவேடிக்கை போன்றது. வைக்கோலில் பற்றிய நெருப்பைப் போல் வெகு விரைவில் அணையக் கூடியது! மேலும் என் துணைவி வாணி என்னிடம் அடைக்கலமாக ஒப்படைத்த ஒப்பற்ற இரண்டு உயிர்கள்! ஆம்! உவமையிலாத செல்வங்கள் உலகினுமரிய உயர் தனி ஒவியங்கள். எனதரும் குழந்தை சாந்தி: வளர்ப்பு மைந்தன் மணி வண்ணன்! இந்த இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றுவது என் வாழ்வின் இலட்சிய மட்டுமல்ல, தம்பி. என் உயிரினுமினிய வாணிக்கு நான் கொடுத்துள்ள, இறுதிக்கால வாக்குறுதி! இந்த உலகமே அழிந் தாலும் அந்தக் குலதெய்வத் திணிடம் நான் கொடுத்த என் வாக்குறுதியை நிறைவேற்றியே தீருவேன். ஆம், இந்தக் குழந்தைகள், அந்தப் பெண் தெய்வம் என்னிடம் ஒப்படைத்த ஒப்பிலாச் செல்வங்கள்; இங்கெனது ஆவி போயினும் வாணிக்குத் தந்த வாக்குறுதியைக் காப்பது என் கடன் குழந்தைகள் என் உயிரின் வேர்கள். (தன்னை மறந்து தன் முன்னைய நினைவில் ایتالیایی ஆம் அதோ பார் என் வாணி! மறுபடியும் வான்வெளியிலே தோன்றுகிறாள். நதியின் அலை