பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


42 . . . கவியின் கனவு சர்வா : அதைவிட மகா துரோகம் உலகில் இல்லை என்று என் சர்வாதிகாரம் சாற்றுகிறது. கவி : அறிவை வளர்க்க நூல்களை எழுதுவது குற்றமா? - - . சர்வா : அறிவை வளர்க்கும் உரிமை அடிமைக்கு இல்லை யென்று அதிகாரச் சட்டம் அறைகிறது! கவி : வறுமையைப் போக்க வழிவகுப்பது பாவமா? சர்வா : வறுமையில் வாடுவதே உங்கள் தலைவிதி! புரட்சிக் கவியா பாடுகிறாய்? மக்களைக் கெடுக்கிறாய்? g கவி உறங்கும் என் மக்களைத் தட்டி எழுப்புவது தீமையா! - சர்வா : மீளா உறக்கத்தில் உங்களை வீழ்த்துவதே எமது திட்டம், இனி என்றுமே நீங்கள் எழுந்திருக்க முடியாது. செங்கோலுக்கு முன் சங்கீதமா பாடுகிறாய். - - கவி : இல்லை. கொடுங்கோலுக்கு முன் போர் முரசு கொட்டுகிறேன். *_ சர்வா : இல்லை! காட்டுப் புலிக்குமுன் வீட்டெலி நாட்டியமாடுகிறது! ஆகா. என்ன துணிச்சல்! என்னிடமே உன் சுயரூபத்தைக் காட்டுகிறாய் உம். அடே .போடு விலங்கை. கொளுத்து வீட்டை. எல்லாம் எரியட்டும். என் மனம் போல்...! - கவி : (துடித்து, ஆ. கொளுத்தவா? என் குரு குலத்தையா? எனது நூல்கள், என் கவிதைகள், காவியங்கள் அனைத்துமே முற்றுப்பெறாத கனவுகள் தானா..? என் நண்பர்கள் எங்கே? சர்வா : அங்கே சொர்க்க்த்தில் உனக்கு வரவேற்புக் கீதம் பாடுகிறார்கள். .