பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் - - 43 கவி சர்வா கவி சர்வா கவி சாந்தி மணி கவி - வேண்டாம். என் மனம் உன்னிடம் பிடிபட மறுக்கிறது. என் அந்தராத்மா அடிமைச் சிறையை உதறித் தள்ளுகிறது. விதியோ விளையாடினாய், வினை வேட்டை யாடி விட்டது.

வேண்டாம். என் கவிதை முடியவில்லை. கனவு

கலையவில்லை. இதுதான் முடிவின் ஆரம்பம்; மரண தாண்டவத் தின் முதற்பகுதி அழிவின் அரிச்சுவடி நீ மட்டுமல்ல, உன் துணைவர் தோழர் அனை வருக்குமே இனி ஆயுள் முடிந்துவிட்டது. என்ன வேடிக்கை? அடே தீ பரவட்டும், எல்லாம் எரியட்டும். என் மனம் குளிரட்டும்! எதிரிகள் மடியட்டும்! ஆ! நெருப்பு என் அருமைக் குழந்தைகள் என் இலட்சியங்கள் குழந்தைகள்! அனைத்துமே முற்றுப் பெறாத கனவுகள்தானா? அய்யோ! அவர்களைக் காப்பது யார்? மணிவண்ணா..! சாந்தி சாந்தி. வாணி! வாணி! உன் குழந்தை களைக் காப்பது யார்? அப்பா. அப்பா. அப்பா. ஆ! வேண்டாம், என் குழந்தைகளைக் கொல்ல வேண்டாம். ஐயோ, குழந்தைகள். சாந்தி. சாந்தி! மணிவண்ணா..!! (கவிஞரின் தலையில் பலமான அடிவிழுகிறது, தன்னிலை இழக்கிறார். அன்பினம் புறாக்கள் போன்ற குழந்தைகள் ஒடிவத்து தந்தையைக் கட்டிப் பிடிக்கின்றனர். இராட்சபை வீரர்களது கரங்களோ, அவர்களைப் பிரித்து அறைகின்றன. மகாகவியின் மனம், நெருப்பில் விழுந்த மலரா