பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. கவியின் கனவு கிறது. தம்மை மறந்து வீரர்களைத் தாக்கப் போகிறார். மகா முரடர்களான வீரர்கள், விலங் கிடப்பட்ட க்வியின் தலையை இரும்புத் தடி கொண்டு தாக்க, அவரது சித்தம், தன்னிலை இழக்கிறது. குழந்தை சாத்தியைப் பார்த்தவண்ண மாகவே கதறிக் குமுறுகிறார்; ஆனால், முதலை வாயிற்பட்ட் மீனைப் போல், காவலர்கள் அவரை இழுத்துச் செல்கின்றனர். 'சாந்தி' 'சாந்தி என்று அவர் உரக்கக் கூவிய அவலக் குரவின் எதிரொளியால் அக்காடும் அதனைச் குழ்ந்த மலையும் குன்றும் நதியும் ஒரு கணம் கவங்கின. வாணி வாணி என்று அவர் எழுப்பிய அவலக்குரலால் வானமும் வான்முகடும் ஒரு கணம் அதிர்ந்தன. ஆனால், வஞ்சக சர்வாதிகாரி யின் மனம் கலங்கவில்லை. சேவகர்கள் சிறிதும் அசையவில்லை. பரந்த உலகிலே அக்குழந்தைகள் அனாதைகளாகிறார்கள். குருகுல மாணவர்கள் அனைவரும் அதற்கு முன்பே கைதிகளாகி விட்டனர். சிலர் கொல்லப்பட்டனர். குழந்தைகள் இரண்டும் எங்கோ புறப்பட்டுப் போகின்றன. பாவம் விதிதிரன் இனி அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்) . (காசி 2 முடிவு)