பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியின் கனவு சுகதே சர்வ: சுகதே சர்வா சுகதே சர்வா சுகதே ...நாட்டுக்குத் தீங்கொன்றுமில்லை. ஆனால், நீதிக்கும் நேர்மைக்கும் மாறாக நடந்தவர்கள் இவர்கள்தான், என்று நீர் எப்படி நிச்சயமாக அறுதியிட்டுக் கூற முடியும்? தாங்கள் கூறுவதைப் பார்த்தால் நம் அரசரும், நியாயவான்களும் ஆராயாது பிழை செய்தார் கள், என்று சுட்டிக் காட்டுவது போல் அல்லவா தோன்றுகிறது! சொற்களுக்கு நேர்மாறான பொருளைக் கொள் வது ஒரு கடினமான வேலையல்ல. பிடிபட்டவர்க ளெல்லாம் பிழை செய்தவர்களல்ல என்பதே என் எண்னம். இங்கு நடக்கும் இக்கடும் தண்டனைகளில்லா விடில், அறியாமை நிறைந்த முரட்டு மக்கள் ஆரணியப் பாம்புகள் போல் பெருகி, சமுதாயத் தையே அழிப்பார்கள். இவர்களை அழித்துப் புனிதமாக்கவே அந்தச் சிவம் நம்மை அறிவாளி களாகப் படைத்தது. நன்றாயிருக்கிறது. உமது முடிவு அறியாமைக்கும், முரட்டுத்தனத்திற்குங்கூட மக்களின் மீதே குற்றஞ் சாட்டித் தப்பித்துக் கொள்ள முயல்வீர்கள் போலிருக்கிறதே! ஆமாம். ஐயம் வேண்டாம், தளபதி முன்னே பல பிறவிகளிற்செய்த பாவங்களின் தொடர்ச்சி இவர் களை விடாமல் இந்தப் பிறவியிலும் தொடர்ந்து பாதகர்களாக்கி விட்டது. ஆதலால் இவர்களை அழித்து மறு உலகத்துக்கு அனுப்பிப் புதுப் பிறப்பை அளிப்பது நம் பொறுப்புத்தான். அதற்காகவே நம்மிடம் கடவுள் இந்த மாபெரும் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார். பெரியவரே, அனாவசியமாகக் கடவுளைக் கடுஞ் சிறைக்குள் கொண்டுவர வேண்டாம். நீர் பேசும்