பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 55 சர்வா சுகதே சர்வா சுகதே சர்வா சுகதே சுகதே வீரன்1 மொழிகள் காதையும் கருத்தையும் துளைக்கும் நச்சுக்கணைகள் போற் பாய்கின்றன - எச்சரிக்கி றேன்! இரக்கம் காட்டாவிட்டாலும் அரக்கத்தன மாகப் பேசாமலாவது இருங்கள். சுகதேவ்! உம் போன்ற அனுபவமற்ற வாலிபர்கள் இதைப் போன்ற பெரும்பதவிகளைத் திறமை யுடன் வகிக்க முடியாதென்பதற்கு ஒரு பெரும் உவமை, தாங்கள், பாவம், இரக்கமிக்க மனம், பெண்களைப் போல அனுபவம் போதாது! அனுபவம் என்ற வார்த்தைக்கு அநியாயம் என்பதுதான் பொருள் என உங்கள் அகராதி யிலிருந்தால், அதை இனிமேல் திருத்திக் கொள்ளுங்கள் சுவாமிகளே! பாவம், கருணை மிக்க அன்பு நெஞ்சம். அன்பும் அறமும் குறுக்கிட்டால் அரசியலில் அதிக லாபம் அடைய முடியாது, அப்பனே! இலாப நட்டம் பார்க்கும் வியாபாரமாக அரசியலை நான் கருதவில்லை. நீவிர் ஒரு வீரரைப்போலும் ஞானியைப் போலும் பேச விரும்புவது நல்லதுதான். ஆனால். அதைச் செயலிற்காட்டக் காலம் வந்து விட்ட தென்றே நம்புகிறேன். (மிண்டும், சோதரர சோதனை என்ற துயரப் பாட்டின் தொடர்ச்சி அவலக்குரலில் அதி ரொவிகள் சவுக்கடிகளின் எதிரொவிகள்) (காவலரிடம், காவலா! அது என்ன அங்கே கூக்குரல்? என்ன நேர்ந்தது? அங்கிருக்கும் கைதிகள் மகா பொல்லாதவர்கள்! மகா பிரபுக்கள் விஜயம் செய்வதை அறிவித்தி ருந்தும் கேட்காமல் பாடுகிறார்கள்.