பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 57 சுகதே சர்வா சுகதே சர்வா சுகதே சர்வா சுகதே (சகதேவன் உறையிலிருந்து வாளைச் சர்வாதிகாரி எடுக்கப் போக) வயதானவரே, தமது அனுபவத்தின் ஆபாசத்தை இவ்வளவு கேவலமாக ஒரு நொடியில் நிருபித்து விட்டீரே! சரி, எனக்கு அனேக பணிகளிருக் கின்றன. விரைவிற் சென்றுவிடும் வெளியே. இல்லை! இந்தத் துராத்மாக்களைச் சும்மா விடக்கூடாது. நில்லும்! இவர்களைத் துராத்மாக்கள் என்று துற்றுவதால் தாங்கள் பரமாத்மா ஆகிவிடலாம் என்று பார்க்கிறீர். அப்படித்தானே. வேடத்திற்கேற்ற நடிப்பு வேண்டும்; காலத்திற் கேற்ற கண்ணோட்டம் வேண்டும். உங்களுக்கு உலகம் தெரியாது. எனக்கு உலகம் தெரியாமலிருக்கலாம். ஆனால், உம்மை மிக நன்றாகவே தெரியும். தாம் சென்று வரலாம். காவலா வெளியே செல்ல வழிகாட்டு இவருக்கு. அவமானம் அரசரது அந்தரங்க ஆலோசகரான சர்வாதிகாரிக்கு அவமானம்! நீர் ஆலோசகராயிருக்கலாம், அதை யாரும் தடுக்கவில்லை. ஆனால், சிறை மந்திரியும் சேனாதி பதியுமான சுகதேவன். ஒரு சாதாரண மனிதரை வெளியே போ என்று ஆணையிடுகிறான். எதிர் மொழி கூறாது கீழ்ப்படிய விருப்பமா? அன்றி அவன் சினத்திற்கு இலக்காகப் பிரியமா? (சர்வாதிகாரி வஞ்சனைப் பார்வையுடன் "சச்சிதானந்தம், மகா காளி என்ற சொற்களோடு வெளியேற, உள்ளே சென்ற வீரர்கள் கைதி ஆனந்தரை வாய்க்கட்டுடனும், விலங்குடனும் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள்)