பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கவியின் கனவு சுகதே கைதி : கவி : வீரர்களே! இக் கட்டுகளை யெல்லாம் அவிழ்த்து விடுங்கள். பாவம், இவர்கள் எத்தனை ஆண்டு களாக இங்கு அடைபட்டுக் கிடக்கிறார்கள்? அந்தக் கணக்கெல்லாங்கூட மறந்து போச்சுங்க எசமான், - (கவி அங்கிருந்து கைதிகளின் விலங்கு களை எல்லாம் பார்த்துப் பைத்தியக்காரச் சிரிப்புடன்) # நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை சொல்வாரடி - கிளியே வாய்ப்பூட்டுப் போட்டாரடி ஆ! சீடனே, உனக்கு எத்தனை பெரிய உரிமைகள்! எவ்வளவு அருமையான நகைகள்! ஆ, இவைகளை அளித்தவர் பெயரைப் பகர்வா யாக அவர்களை வசை பாடி ஒழிப்போம், நாம்! தமயந்தியான சாவித்திரி, சொர்க்கம் என்னும் நரகிலே, நாட்டியம் என்னும் பாட்டிலே, தூங்கிப் பறந்த சமயத்திலே, அரிச்சந்திரனாகிய துரி யோதனன் ஏன் போய் இம்சித்தான்! கொடிய வனான சீராமன் - குற்றமற்ற இரணியனை எப்படிக் கொல்வான்? அந்தச் சாந்தியுள்ள லட்சு மணன். ஆ. சாந்தி. சாந்தி. சாந்தி!! வெள்ளை மயில் ஆடும்; குயில் பாடும் பச்சைக்கிளி பேசும்: கருடன், கழுகு முதலியவை சந்தோஷம் தாங்காது 'கை' என்று சப்தமிடும் சாந்தி. சாந்தி வாணி. வாணி இல்லை! நான் உன் குழந்தையைக் காப்பாற்றுவேன், அம்மா, காப்பாற்றுவேன்! இது சத்தியம் சாந்தி: சாந்தி சாந்தி! (பலமுறை கதறி ஓய்ந்து செயலற்று ஒதுங்கி ஒரு தாயின் மடியில் விழும் குழந்தை போலத் தேம்பித் தேம்பி அழுகிறார்)