பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 59 சுகதே கவி (தன் துணையாள் கருணாலயரிடம், இவர் ஒரு பெரிய மேதை போலிருக்கிறதே! பேச்சின் போக்கைப் பார்த்தால் சிறந்த கவிஞராகவும் ஆசிரியராகவும் காணப்படுகிறார். (கவி சகதேவனைப் பார்த்தவண்ணம் நெருங்கி) சீடர்களே! இதோ, திரு. இராமபிரான் எங்கே என் காவியங்கள்! இந்த ரகுகுல மணியின் பாதங்களில் சமர்ப்பணம் செய்வோம். (அபிநயத்துடன் பாடுகிறார்) வெய்யோன் ஒளி தன்மேனியின் விரிசோதியில் மறைய பொய்யோஎனும் இடையாளொடும் இளையானொடும் போனான் மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ! ஐயோ.இவன் வடிவென்பதுஓர் அழியா அழகுடையான்! சவியுறத் தெளிந்து தண்னென்று சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்! நான் என்ன கண்டேன்? மாணவர் களே, எங்கே என் மகா காவியம்? அமரத்வமான கவிதைகள் - இலக்கியங்கள், நாடகங்கள். சரி நீங்களாவது படியுங்கள், பாடுங்கள்! பதறுங்கள்! ஓம் சாந்தி வாணி வாணி சாந்தி ஒ என் சாந்தி. சாந்தி. ஆம் மணிவண்ணனுக்கு மகுடம் சூட்டும் போது வெள்ளை மயில் ஆடும்; குயில் பாடும்; கருடன், கழுகு முதலியவை மகிழ்ச்சி தாங்காது “கை” என்று சப்தமிடும். சாந்தி. சாந்தி. சாந்தி..! விதி. விதியடா! விதி விதிமகனே! (தலையில் அடித்துக் கொண்டு. மீண்டும் சே7ர்ந்து அழுகிறார்)