பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ்.டி. சுந்தரம் 61 சேவகன் வீரன் சுகதே வீரன் சுகதே தெழுந்த அந்த சோகக் கனவு என்னவென்று அறிய முயற்சி செய்ய வேண்டும். ஒரு சேவகன் வந்து வணங்கி

வாழ்க, நம் வெற்றி வேந்தர் தங்கள் வரவுக்காகக்

காத்துக் கொண்டிருக்கிறார். (கதேவன் புறப்பட, வீரன் வணங்கி) மகா பிரபு, இக்கைதிகள் சில சமயங்களில் மிகவும் தொல்லை தருகிறார்கள். ஏன், நீங்கள் துரங்க முடியாதபடி பாடிக் கொண்டிருக்கிறார்களா? ஆமாங்க, எசமான். முட்டாள். உன்னைத் துரங்குவதற்காகவா இங்குக் காவல் வைத்தது? கடமையை ஒழுங்குறச் செய்யுங்கள். அப்பைத்தியக்காரக் கவிக் கைதிக்கு ஒரு சிறு ஆபத்தும் நேராமல் பாதுகாத்து வையுங்கள்! அவர் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் உங்களுக்குக் கொடிய தண்டனை கிடைக்கும், எச்சரிக்கை. - (வீரருடன் வெளியே செல்லுகிறான். மறுபுறம் சர்வாதிகாரியும், கண்டாகர்ணனும் வந்து கைதி களைக் கசையான் அடிக்கின்றனர், மீண்டும் அதே சோக ஒலிபரப்பும் துர இசையும் கேட் போரின் மனத்தைச் சித்திரவதை செப்கின்றது (காசி 4 முடிவு)