பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இடம் : காடு காலம் : காலை (பார்க்கும் போதே மழை வெள்ளத்தாலும், புயலாலும் அழிக்கப்பட்ட பிரதேசமென்று வெகு எளிதிற் சொல்லி விடலாம். அங்கு ஒரு பாழமடைந்த மண்டபம், குட்டிச் சுவர்களைத் தவிர வேறு ஒன்றுமில்லை, உள்ளே ஒரு ஏழைக் கிழவி காய்ச்சலால் நடுங்கும் சத்தம் கேட்கிறது. குட்டிச் சுவரின் பக்கத்திலே கூரையில்லாக் குடிசையருகே ஒரு ஏழைக் கிழவன் ஒலைச் சுவடிகளைக் கொண்டு வெகு சிரமப்பட்டு அடுப்பைப் பற்ற வைக்க முயன்று கொண்டிருக்கிறான். அவ்வழியே சுமார் இருபத்திரண்டு வயதுள்ள மணிவண்ணன் நாட்டுப்பற்று ததும்பப் பாடிக் கொண்டு வருகிறான். அவன் தங்கை சாந்தியும் பின்பற்றிச் சோர்ந்து நடந்து வருகிறான்) எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே - அவர் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே - அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே - இதை வந்தனை கூறி மனதில் இறுத்தி என் வாயுற வார்த்தேனோ! மணி : இப்படி உட்காரம்மா. அதோ, அப்பெரியவரிடம் அருகில் ஏதேனும் ஊர் இருக்குமா என்று விசாரித்து வருகிறேன். (சாத்தி ஒரு கல்மீது உட்காருகிறாள். கஞ்சி காட்சிசும் முயற்சியில் கடுமையாக ஈடுபட்டிருந்த கிழவரிடம் தெருங்கி) மணி : ஐயா. ஐயா!