பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ்.டி. சுந்தரம் 63 கிழவர் மணி மணி கிழவர் +. o

போங்கடா போங்க பொழுது விடியறதுக்கு முந்தியே வந்துட்டீங்களா அங்காலே காலை பிலே இலையிலே வீட்டைக் கீட்டைப் பார்த்துக் கீத்துக் கேட்டாலும் கீட்டாலும் ஏதோ கொஞ்சம் கஞ்சி கிஞ்சி தண்ணி கிண்ணி கிடைக்கும். இங்கே வந்து ஐயா, பையான்னு உயிரை எடுக்கிறானுவ. போங்கடா போங்க போக்கத்தப் பசங்களா! 'மீண்டும் ஒரு சுவடியை எடுத்து அடுப்பில் வைக்கிறார்; - அய்யா, ஏன் இந்தச் சுவடிகளையெல்லாம் வீணாக எரிக்கிறீர்கள்? ஏதாவது நல்ல நூல் இருந்தால் பாழாய்ப் போய்விடாதா? போடா போ. புதுப் புத்திசாலி. அம்மிக்கல்லே அந்தரத்திலே பறக்குதாம். இவன் எச்சிலைக்குப் பாரம் வைக்க வந்துட்டான். ரெண்டுகூடை ஒலை யோட ஒரு நூல் எரிஞ்சா என்ன நஷ்டமோ, தெரியல்லே. அய்யா! உங்களுக்குப் படிப்பின் அருமை தெரியாததால் இந்த ஏட்டுச் சுவடிகளை யெல்லாம் வீணாக எரிக்கிறீர்கள். டே டே போடா போ. போக்கத்தவனே! மகா படிச்சவன் வந்துட்டான். இந்தக் காலத்தில் பசிக்குக் கஞ்சி கெடைக்கிறதே குதிரைக் கொம்பா இருக்குதாம். இந்த இலட்சணத்திலே படிப்பில்லே பிடிப்பில்லேன்னு வேதாந்தம் பேசி என் வயித்தெரிச்சலைக் கிளப்ப வந்துட்டான். போ, போ. என்னடா பெரிய படிப்பு? உன் படிப்பு எங்க பட்டினிக்கு ஒரு பிடி சோறு போடுமாடா? - - - . . . ஐயா. செவிக்கும் மனதுக்கும் உணவு தகும் இந்த நூல்களையெல்லாம், கேவலம், வயிற்றுக் கஞ்சிக்காக நாசப்படுத்துவது நியாயமல்லய்யா.: