பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


64 கவியின் கனவு கிழவர் : மணி கிழவர் : மணி கிழவர் : மணி : டே பயலே, உனக்கு இப்போ என்ன? காலை யிலே என்ன ஒரே வேதாந்தமாகப் பேசித் தள்றே. பித்தம் கித்தம் தலைக்கு கிலைக்கு ஏறி கீறிப் போச்சா, என்ன? என் ஒரே பெண்டாட்டி, அதோ குளிர் காய்ச்சல்லே நடுங்கறா, இந்தக் கஞ்சி காச்சாவிட்டால் அவள் உயிரே போயிடும் போல இருக்குது. நீ வேறே, வேதாந்தம் பேசறே. இராத்திரி பூரா மழை, புயல், குளுர் நடுங்குது. எல்லாம் ஈரம், எலும்பெல்லாம் நடுங்குது. நனையாத இந்த ஒலைதான் நல்லாப் பத்துது. நவுறு. நான் குளிர் காயனும், கஞ்சி காச்சனும். எங்கே பார்க்கலாம். (சுவடிக் கூடையின் கை வைக்க/ (வெகுண்டு) டே பயலே, தெரிஞ்சுதடா உன் சங்கதி. திருட்டுப் பயலே, அங்கேயிருந்தே மெதுவா கிட்டே வந்தே இப்போ கூடையிலே யும் கையை வைக்கிறே. ஒகோ, பேசிக்கிட்டே இருந்த கஞ்சிக் கலயத்தைத் துக்கிக்கிட்டு ஒட்டம் பிடிக்கலாமுன்னு பார்க்கிறியா டேய், நீ திருடனா இருக்கலாம். ஆனா, இந்த வயசான கருடன் கிட்டே ஒண்ணும் நடக்காது, தம்பி! நடக்காது! நீ பஞ்சத்துக்குத் திருடன். நான் பரம்பரையாத் திருடன் தெரியுமா? - (போசித்து பெரியவரே, ஏதாவது பணமிருந்து கொடுத்தால் இவைகளைத் தருவீர்களா? என்ன, பணமா, உன்னைப் பார்த்தால், நாடோடி பிச்சைக்காரப் பரதேசிப் பயமாதிரி தெரியுது. உங்கிட்டே பண்மேது? நாங்கள் பிச்சையெடுத்துப் பிழைத்தாலும் கொஞ்சம் மீத்து வைக்கும் பழக்கமுண்டு அய்யா, (சற்று துரத்தில் களைப்பாற அமர்ந்திருந்த தங்கை சாந்தியிடம்)