பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 65 மணி சாந்தி மணி கிழவர் : Loា சாந்தி மணி சாந்தி மணி சாந்தி ഥങ്ങി உன்னிடம் ஏதாவது பணம் இருக்கிறதா அம்மா. அண்ணா, இரண்டே இரண்டு பணம். இன்றைய உணவுக்கு இதுதான் வழி. (எடுத்துத் தருகிறாள்) (வாங்கிப் பெரியவரிடம் தந்து இந்தாருங்கள் பணம். - (சற்று மனமிரங்கி சரி, சரி. நானும் கஞ்சி காச்சியாச்சு, வெய்யிலும் வந்தாச்சு மீதியிருக்கிற இந்த நாலஞ்சு சுவடியையும் எடுத்துக்கிட்டுப் போ. உன் பணமும் வேணாம், கினமும் வேணாம். (அவைகளைப் பிரித்தவண்ணமே, சாந்தி நம்நாடு என்ன அறியாமையில் மூழ்கிக் கிடக்கிறது பார்த் தாயா? சகல கலைகளும் நிறைந்த நாடென்று. சரித்திரத்திலே காணுகின்றோமே தவிர, எங்கும் ஏக்கமும் துயரமும் அறியாமையுமே நிறைந்து காணப்படுகின்றன. நாட்டின் சரித்திரங்களெல்லாம், எழுத்தாளர் களின் கற்பனைகள்தான், அண்ணா. உண்மை சிறிதேனுமின்றி அரிய வரலாறுகள் எழுந்திருக்காதம்மா. - பின், அதில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட தற்போது காணாதது ஏன் அண்ணா? கடவுள் செயலால் காலம் வரும்போது மீண்டும் இந்நாடு உன்னத நிலையெய்துமம்மா. கடவுள், காலம், விதி, வினை இவையெல்லாம் கவிஞர்கள் பூசிய கற்பனை வர்ணங்கள் அண்ணா. சோர்விலே பேசுகிறாய், சாந்தி.