பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் - * 67 மணி சாந்தி மணி சாந்தி மணி கிழவர் : திருடர்கள் வார்கின்ற இவ்வுலகில் குருடர்கள் வாழ்வது ஆகாதா? போலிகள் வாழ்ந்திடும் திருநாட்டில் கூலிகள் வாழ்ந்திடலாகாதா? காலிகள் ஆடிடும் திருநாட்டில் கன்றுகள் ஆடுதல் கூடாதா? (திருடர்) அந்தோ, பாவம்! அண்ணா, என்ன இனிமையான குரல் ஆனால், கண்கள் குருடாய் அமைந்து விட்டனவே. அதுதான் உங்கள் கடவுளின் கருணை. சாந்தி, கடவுளின் கருணையிருப்பதால்தான், குருடாயிருந்தும், இக்குழந்தை தானாக நடக்கும் சக்தியையாவது பெற்றிருக்கிறது. குழந்தாய் இந்தாம்மா காசு. (குறுக்கிட்டு அய்யா, அந்தப் பெண்ணுக்குக் காசு தராதிங்க. இந்தக் குட்டி மகாவேஷக்காரி. குருடுன்னு ஏமாத்திப் பொய் சொல்லுதுங்க. கண்ணிலே சிவப்புச் சாயம். ஏ. குட்டி, கண்ணைத் தெறக்கிரியா, அடி வேணுமா? (என்று ஏழைச் சிறுமியின் கண்ணில் ஒட்டிக் கிடந்த செம்பஞ்சை எடுக்கிறார்) ஏழைச் சிறுமி : (பயந்து ஐயோ, தாத்தா என்ன தாத்தா மணி செய்யறது? இப்படியெல்லாம் வேஷம் போட்டுக் கிட்டாலும் காசு தர்ரவங்க இல்லையே, தாத்தா. பசிக்கு என்ன தாத்தா செய்யறது? (மனம் புழுங்கி ஐயோ! பாவம் பெரியவரே, பசிக் கொடுமையின் கோரம், இச்சிறு குழந்தையின் மனத்தையும் என்ன மாசுபடுத்தியிருக்கிறது பார்த்தீர்களா! -