பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடம் : மாளிகை காலம் : மாலை (அன்பு நாட்டின் தலைநகர் வீரசிம்ம வேந்தனது உல்லாச அரண்மனை. கலையின் பெயரால் காமத் தோட்டத்தைச் செழிப்பாக வளர்க்கும் கலைவாணி ஊர்வசி. தனது பருவக் களிப்பினாலும், உருவ நெளிப்பினாலும், காண்பவர் கண்களைக் கவர்ந்து ஆடுகிறாள். தன்னை மறந்த போதை வெறியுடன் நாட்டியக் கலையின் முழுத் திறமையையும், சபையிலே அள்ளி வீசுகிறாள். முழுமதியின் நிலவொளி வீசும் நீர்த்தடங்களெல்லாம் நிலாக்கதிரின் காந்தியைப் பெற்று ஒளிர்வது போல ஊர்வசியின் முகத்தொளியால், முன்னமர்ந்திருந்த சபையினர் ஒவ்வொருவர் முகமும் புத்தம் புதியதொரு வனப்புடன் விளங்குகிறது. வைரத்தில் இல்லாத பிரகாசம் கண்ணாடித்துண்டித் தெரிவது போல, அங்கிருந்த மனிதக் கண்ணாடித் துண்டுகள் தங்களை வைரங்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தன. வீரசிம்மன், இளவரசி மேனகை, சேனாதிபதி சுகதேவன், அவன் தங்கை கனிமொழி மற்றும் துணையதிகாரி, வேலைக்காரன் கார்மேகன்; பெருங்குடி மக்கள் அனைவரும் அமர்ந்திருக்கின்றனர்) இளர்வசியின் பாடலும் ஆடலும் மின்னல் விழி பாயவே மண்மேல் மாந்தரெல்லாம் எந்தன் பொன்னடி வீழ்வார் (மின்) பெண்ணில் அழகியெனைப் போல எவர் இங்கே? விண்ணகத் தோரும் வேட்கை கொள்வா ரென்மேல் (மின்) கள்ளை வெல்லும் அமுத கோவையிதழ் திறந்து கன்னல் சொல்லைப்புகலக் கூவும் குயில் அழியும் (மின்) வெள்ளச் சுழல்விழியில் வீழ்ந்தவர் வாழ்வதில்லை தெள்ளியதேன்சுவையில் திளைத்தவர் மீள்வதில்லை (மின்)