பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் . - - - 73 வீரசி சுகதே என்ற பட்டங்களை நம் மகாராணிக்கு அளித்துள் ளார்கள். நமது புண்ணியப் பெருந் தவத்தின் பயன்களெல்லாம் ஒருங்கே திரண்டு, ஒருருவாய்த் திகழும் நமது மகாராணியார், அரோக திடகாத்திர செளந்தர்ய வதனியராய், சுக சாரீர சுகுண சம்பன்னையாய், சர்வ செளபாக்கி யவதியாய், சகலகலா வாணியாய், சரசியாய், அரசியாய் விளங்கி, நம்மையாள நாமெல்லாரும் துணை புரிவோமாக. மகாகாளி மகாகாளி சதாசிவம்! சச்சிதானந்தம்! (அரசிக்கு மாலை தந்து 2ے/AAZ7/ அடுத்தபடியாக, நமது சேனாதிபதியும் சிறை மந்திரியுமான சுகதேவர் பேசுவார். (கம்பிரமாக எழுத்து பெரியோர்களே! கலை, உலக ஒற்றுமைக்கு வழி காட்டுகிறது. ஆனால் அது இதுவரை அரண்மனைகளிலும் மாளிகை களிலுமே அடைபட்டுக் கிடக்கிறது. பொது மக்களிடம் பரவ வழியின்றி நாம் கலையைத் தடுத்து வைத்திருக்கிறோம். மக்களுக்கோ ஒண்டக் குடிசையில்லை, ஒதுங்க நிழலில்லை. குடிக்கக் கூழில்லை. முதலில் ஏழை மக்களது சீர்குலைந்த வாழ்வை மேம்படுத்த நாம் முன்வரவேண்டும். அதுவே ஒரு பெருங்கலை. கலைகள் எல்லாம் எல்லோர்க்கும் பரவிப் பயன்பட வேண்டு மானால், மக்களை மேல் நிலைக்கு உயர்த்த நாம் பாடுபட வேண்டும். நாம் பெற்ற இன்பம் இவ் வையமும் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணம் நமக்கு வேண்டும்.மேலும், ஏழை மக்கள் எவ்வாறு கலையின்பத்தை நுகர முடியும் என்று நம்மில் சிலர் ஐயுறலாம். அதற்கு எடுத்துக்காட்டாக, நேற்று நம் நகரிலே, ஒரு ஏழை நாடக மன்றத்தார் நடத்திய நாடகத்தைப் பார்த்தேன். அச்சிறுவர்களது உழைப்பிலே கலை யின் உயர்வு