பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஊர்வ வீரசி ஊர்வ வீரசி ஊர்வ வீரசி ஊர்வ கவியின் கனவு சகிக்க முடியாத சதி நடக்கிறது! சர்வநாசம் விளையப் போகிறது! சாபம் வேண்டாம். சங்கதி என்ன? இப்போது என்ன நடந்து விட்டது? (வஞ்சக நகையொலிக்க வேறென்ன நடக்க வேண்டும்? பெருங்குடி மக்களெல்லாம் கூடி யிருக்கையில் என்னை அவமானப்படுத்தி விட்டானே. ஆகா! அச்சிறுவன் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் முள்போல் என் இதயத்துள் பாய்ந்து வேதனை செய்கிறதே!

(முகம் சளித்து எரிந்து பேசாதே என் பரிமளப்

பதுமையே! என்ன அப்படிப் பிரமாதப்படுத்திக் கொள்ளுகிறாய்? சுகதேவ் தீராப் பகையை உண்டாக்கி விட்டான். பகை அது கணத்தில் மறையும் புகை அதை மிகைப்படுத்தினால் அது நம்மை நகைப்படுத்தி விடும்! அந்தப் பகையை உன் புன்னகைக்கு இரையாக்கு, கண்ணே! போதும் சமாதானம். உமது தெய்வத்தை கலைவாணியை குறை கூறிக் குத்தலாகப் பேசிப் பெருமக்களின் பாராட்டுதலைப் பெற்ற அச் சிறுவன் சுகதேவைத் தாங்களாவது மறுத்துப் பேசினiர்களா? மறுத்துப் பேசினால் அவன் வார்த்தைக்கு மெருகு கொடுத்தது போலாகும். அதனால்தான் ஒரு விதமாகப் பேச்சை மாற்றிப் பேசி, மழுப்பிக் குழப்பி ஒருவாறு மறைத்து மறந்து மன்னித்து விட்டேன். எப்படி? அக்கயவனை எவ்விதத்திலும் பழி வாங்கியே தீருவேன்.