பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ்.டி. சுந்தரம் 81 வீரசி ஊர்வ வீரசி ஊர்வசி என்ன இவ்வாறு கூறிவிட்டாய்? இருபது ஆண்டுகளாக இவன் அனுபவித்து வரும் உன் சொர்க்கானுபவத்தை ஒரு விநாடி நேரம் எண்ணினால் போதாதா? பின்வாங்கவும் மனம் இடந்தருமா கண்ணே! என் பேசும் பொற் சிலையே! உனது இன்பத்துக்காக மூன்று உலகங் களும் நாசமானாற்கூட அதை நான் மனமார வரவேற்பேன். காலகாலமாக உருவாகும் என் காதல் காவியத்தின் கடைசி ஏடு நீ! நீ வாடினால் என் உயிர் வாடும். உம். புறப்படு! காமனின் சிறப்பிடம் செல்வோம்! சரி, ஏதோ ஒரு ரசமான நாடகம் நகரில் நடப்ப தாகக் கூறினானே, அதை நான் பார்த்துவிட வேண்டும். யாரது? அடே, கார்மேகா (காவலன் வர நீ உடனே போய், அரசரும் ராணியும் நகரிலே நடக்கும் ஒரு ரசமான நாடகத்தைக் காண வேண்டுமெனவும், அதற்கான ஏற்பாட்டை உடனே செய்யச் சொன்னதாகவும் அதிகாரியிடம் கூறிவிடு, கார்மேகா நீ போ! ஊர்வசி நீ வா! (அரசன் அரசியை இழுத்துச் செல்வக் கார்மேகம் தனித்து - கார்மேகம்: என்ன இது? ரசமான நாடகமா? இது என்ன நாடகமய்யா இது! உம், ரசமான நாடகம்! குழம்பான நாட்டியம்! சரி என்ன இழவோ? நமக்கெதுக்கிது? போய்ச் சொல்லிவிடலாம். (फrcॐ 6 ®(2ऽ!)