பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o § இடம் : நாடக மேடைக்குள் ஒரு சிறு நாடக மேடை காலம் : இரவு (இரவு ஊர்வசியும், அரசரும் பெருங்குடிகளிற் சிலரும் வீற்றிருத்தல். எதிரில் சுகதேவும், கனிமொழியும் அமர்ந்து ஆர்வத்தோடு பார்த்தல். மேடையுள்ளிருந்து ஒரு கூட்டப் பாடல் கேட்கிறது) - - கூட்டமுதப் பாடல் வான்மதி கதிர்ஒளி வாரிதி புயல் புவி காரணம் வாழியவே - கலைக் காரியம் வாழியவே! (வான்) சூழ்இருள் விலக்கிடும் சுழன்றிடும் அறிவொடு ஏழிசை இயலொடு எழில் தரும் மயலொடு நாடகம் வாழியவே - நம் நாட்டெழில் வாழியவே! முதற்காட்சி (ஏழை நாடக மன்றம்’ என்ற பெயர்ப் பலகை தொங்குகிறது. ஒரு தடாகப் பின்னணித் திரை. முருகன் - வள்ளி வேடந்தரித்த இருவரும் ஒருமயமாகி நிற்கச் சூத்திரதாரன் தோன்றிப் பேசுகிறான்) . சூத்திரதாரன் : கருணைக் கடவுளே! அழகின் சிகரமே! கலைகளின் பிறப்பிடமே! இன்று நாங்கள் நடத்தப் போகும் 'கனவு’ என்ற இந்த நாடகம் யாதொரு குறைவுமின்றி நடைபெற அருள்புரிய