பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 f fffffffff வாணி வேத வாணி வேத வாணி வானி கவியின் கனவு வேதம்! இங்கு இனியும் நின்றுகொண்டே இருந்தால் உன் மதிப்பு தற்கொலை செய்து கொண்டே போய்விடும் வா போகலாம். வருங்கால மகாராணியாகிய வேதத்துக்கு இவ்வளவு முன்கோபம் கூடாது, மாயா, என்ன துணிச்சல்! என்னைச் சர்வ முட்டாளாக்கு கிறாயே? உன்னை வேறு ஒருவரால் ஒருபோதும் முட்டாளாக்க முடியாது, வேதம். அப்படியானால் நான் ஏற்கெனவே முட்டாளா? அடடா என்ன இது? இல்லாத குறையை வலிய வரவேற்கிறாய். பொறாமைக்கு இடம் கொடுக் காதே. நீ ஒரு கலைப்புறாவாக இருப்பதையே விரும்புகிறேன். ஒகோ! நான் ஒரு காட்டுப்புறா. நீ ஒரு காண மயிலாக்கும் எவ்வளவுதான் பழகினாலும் உன் குல வழக்கம் போய்விடுமா? ஆயிரந்தான் கற்றாலும் உன் அற்பகுனம் போய்விடுமா? கவியின் மனைவி என்ற கர்வம்! வேதம், நானும் ஒரு பெண்தான் என்பதை மறந்து பேசுகிறாய். குலத்தைக் காட்டி என் குலையை நடுங்க வைக்காதே. பிறப்பை வைத்து என் பொறுமையைப் பழிக்காதே. மண்ணைத் தங்க மாக்குவது போல், நானும் என் வாழ்வைத் திருத்திக் கொண்டேன். வீணாக வையாதே வைதால் என்ன செய்து விடுவாய்? நான் உன்னை என்னம்மா செய்ய முடியும்? உன் வாய் வலிக்குமே என்று வருத்தப்படுவேன். சத்தம் அதிகமானால் செவிகளை மூடிக் கொள்வேன்.