பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1957-ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பு வெளியீட்டின் போது மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அமரர் டாக்டர் திரு. மு. வரதராசன் அவர்கள் வழங்கிய க பynட்டுரை 'கவியின் கனவு’ நாடகத்தைச் சில முறை கண்டு மகிழும் பேறு பெற்றவன் யான். ஒவ்வொரு முறையிலும் இது சிறந்த நாடகம்’ என்று உணர்ந்து நிறைந்த உள்ளத்தோடு வீடு திரும்பினேன். r நாடகத்தின் ஆசிரியர் நல்ல கவிஞர் உயர்ந்த குறிக் கோள்கள் உடையவர். அவருடைய கனவு இதில் கலைத் திறனோடு அமைந்துள்ளது. நண்பர் திருவாளர் எஸ்.டி. சுந்தரம் அவர்களின் வாழ்க்கைக் கனவே இந்த நாடகத்தின் அடிப் படையாக அமைந்துள்ளது என்று அறிந்தபோது என் உள்ளம் உருகிற்று. சர்வாதிகாரியும் ஊர்வசியும் நம்முடைய வெறுப்புணர்ச்சிக் கெல்லாம் இலக்கு ஆகிறார்கள். கவிஞர் ஆனந்தர் நம்முடைய மதிப்புக்கும் வணக்கத்துக்கும் உரிய உயரிய மனிதர். மணி வண்ணனும் சாந்தியும் சுகதேவனும் கனிமொழியும் நம் அன்பைக் கொள்ளை கொள்கிறார்கள். நாடகத்தின் இடையே அமைந்துள்ள பாட்டுக்கள் “விதியை வெல்வோம்”, “காலமெனும் காட்டாறு முதலிய பாட்டுக்கள் - சிறந்த நல்லுணர்ச்சியின் வடிவங்கள் உயர்ந்த உள்ளத்துப் பேச்சுக்களாக உள்ள உரையாடல் சில இடங்களில் கவிதை போலவே அமைந்துள்ளன. சுகதேவன் குடிமக்களிடம் நீண்ட பெரும் பேச்சுப் பேசினும், அந்தப் பேச்சுக்கள் பயனுள்ள பகுதிகளாக - நாடகப் போக்கிற்கு இயைந்த சுவையான பகுதி களாக - உள்ளன. மன்னனின் கலைப்பேரவையில் வீரசிம்மனின் வினாக்களும், ஊர்வசியின் வினாக்களும், அவற்றிற்கு மணி வண்ணன் சுடச்சுட அளித்த விடைகளான தெளிவுரைகளும்