பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ்.டி. சுந்தரம் 97. சர்வா கண்ட : சர்வா கண்ட : சர்வா கண்ட : சர்வா கண்ட : சர்வா கண்ட : இந்த சடத்துக்கு, எதுக்கடா பால். நேற்று நடந்த மகாயக்ளுத்துக்கு ஆடுகளை உதவியவர் լլյորrr? நேற்று ஆடுகள் தந்தது மகாசகாய வணிகர் அண்ணலே. ஆடு, என்று அசிங்கமாகச் சொல்லாதே அஜம் என்று அழகாகச் சொல்லேன்டா! சரி. அஜம். சரி, நாளை..? பத்து மாடுகள் தருவதாக ஒப்புக்கொண்டார். பசு மாடுகள் எதற்கு பாவம்! அதன் மடிகளே போதும் யாகத்திற்கு! சுவாமி யாகம் எதற்கு? யாகம் - யோகம் - இவை போகபாக்கியங்களுக்கு வழிகாட்டி சரி. ஆ. சிஷ்யா, வியப்படையாதே கொள்கை மாறுவது குற்றமல்ல, பக்தன் ஆகி விட்டால் பிரபுக்கள் நம்மை ஆதரிப்பார்கள். பெண்களும் வெறுக்க மாட்டார்கள். பேச்சு அழகாயிருந்தால் வாலிபர்கள் நம்மைச் சுற்றிக் கொண்டே இருப்பார்கள். இந்நாட்டு மக்களுக்குப் பேச்சென்றால் பிரியம் அதிகம். மூச்சிருக்கும் வரை பேசுவோம். சேனாதிபதி சுகதேவனை நாம் ஒழித்துக்கட்டி நாம், வாழ இது ஒரு புது வழி, அரசியல் நெறி! அதில் நீ ஒரு நரி! (இரு வணிகர்கள் ஏதோ பொன்முட்டை காணிக்கை தாங்கி, குருதேவர் பாதபூஜைக்கு வந்திருக்கின்றனர்) - வாருங்கள் பெருங்குடி மக்களே, என்ன விசேடம்?