பக்கம்:கவி பாடலாம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருத்த வகை 99

இலக்கணம், ஒவ்வோர் அடியிலும் ஒரே சொல்லோ தொடரோ ஐந்தாவது சீராக இருக்கும். நான்கு அடிகளும் ஒரெதுகையாக வரும்; இது எல்லா விருத்தங்களுக்கும் பொது இயல்பு.

வீரம் இல்லார் வீரம் பெற்றார் காந்தியினால் சீரொன் றில்லாத் தேயம் இலங்கும் காந்தியினால் போரென் றாலும் உயிர்க்கோள் இல்லை காந்தியினால், இந்த வெளிவிருத்தம் மூன்றடிகளால் வந்து, காந்தியினால் என்ற ஒரு சொல்லே அடிதோறும் ஐந்தாம் சீராகப் பெற்றிருப்பது காண்க. -

‘ஆவா வென்றே அஞ்சின ராழ்ந்தார் ஒருசாரார் கூகூவென்றே கூவிளி கொண்டார் ஒருசாரார் மாமா வென்றே மாய்ந்தனர் நீத்தார் ஒருசாரார் ஏகீர் நாய்கீர் என்செய்து மென்றார் ஒருசாரார்.” இது நான்கடியால் வந்த வெளிவிருத்தம். ஈற்றில் ஒரு தொடரே வராவிட்டால் இது கலித்துறை ஆகிவிடும்.

ஆசிரிய விருத்தத்தின் இலக்கணத்தை முன்பே விரிவாகப் பார்த்துவிட்டோம்.

கலிவிருத்தம் அளவொத்து வரும் நான்கு சீர் அடிகள் நான்காக வருவது கலிவிருத்தம்.

“உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகி லாவிளையாட்டுடை யாரவர் தலைவ ரன்னவர்க் கேசர ணாங்களே."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/100&oldid=655687" இலிருந்து மீள்விக்கப்பட்டது