பக்கம்:கவி பாடலாம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 கவி பாடலாம்

கம்பராமாயணத்தில் வரும் இது கலி விருத்தம். இந்த விருத்தத்தில் அடி தோறும் பன்னிரண்டு எழுத்துக்களே இருப்பதைக் காணலாம். யாப்பிலக்கணத்தில் வரும் எழுத்துக் கணக்கில் ஒற்றுச் சேராது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த விருத்தத்தில். ‘புளிமா கூவிளம் கூவிளம் கூவிளம்’ என்ற வாய்பாட்டில் ஒவ் வோரடியும் வந்திருக்கிறது. புளிமாவுக்குப் பதில் தேமா இருந்தால் அடிதோறும் பதினோரெழுத்துக்கள் இருக்கும். சாந்த மாமுனி வோர்தொழும் தற்பரன் சேந்தன் வேலவன் சேவலெடுத்தவன் போந்த கொங்கிற் பொலிதிரு மோகனூர்க் காந்த மாமலை காதல்செய் தானரோ.

இந்தப் பாடலில் அடிதோறும் பதினோரெழுத்து வந்ததைக் காணலாம். கொங்கிற்-பொலிதரு என்னும் இடத்தில் கூவிளஞ் சீர் வராவிட்டாலும் மா வந்த பொழுது அடுத்து நிரை வந்தமையால் ஒசை, கெடாமல் எழுத்துக் கணக்கும் கெடாமல் நின்றன. -

பலபல கலையுணர் பருனிதர் குலவினர் கலைநல மிகுசுவை கருதினர் பருகினர் அலைபடு கடலென அளவறு பனுவல்கள் குலவுற அவைநளி குவியுற நிறுவினர். இதுவும் ஒரு வகைக் கலி விருத்தம். ஒவ்வொரு சீரும் கருவிளமாகவே வந்தது. பனுவல்கள் என்பதில் லகர ஒற்று அலகிடப்படாது.

கந்தர் அநுபூதியில் வருவன கலிவிருத்தங்களே.

“ஆடும் பரிவே லணிசே வலெனப்

பாடும் பணியே பணியாயருள்வாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/101&oldid=655688" இலிருந்து மீள்விக்கப்பட்டது