பக்கம்:கவி பாடலாம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 கன பாடலாம

இப்போது அளவொத்து வரும் அடிகளைக் கொண்ட பாடல்கள் இன்னவை என்பதை நினைவுக்குக் கொண்டு வருவோம்.

இரு சீரால் வரும் அடி நான்கை உடையது வஞ்சித்துறை. --

மூன்று சீரால் வரும் அடி நான்கை உடையது வஞ்சி விருத்தம். -

நான்கு சீரால் வரும் அடி நான்கை உடையது கலிவிருத்தம்.

ஐந்து சீரால் வந்து ஒரு சொல்லே ஈற்றில் வருவது வெளிவிருத்தம்.

ஐந்து சீரால் வரும் அடி நான்கை உடையது கலித்துறை.

ஆறுசீர் முதல் எத்தனை சீராலும் வரும் அடி நான்கை உடையது ஆசிரிய விருத்தம்.

சீர்க் கணக்கை வரிசையாக எண்ணிப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டியவை இவை.

விருத்த வகையை மட்டும் கவனித்தால் பின்வருவன வற்றை நினைவிற் கொள்ள வேண்டும். 1. வெளிவிருத்தம்: 5 சீர் ஒரே சொல் ஈற்றுச்சீர் மூன்று

அல்லது நான்கடி. .

2. ஆசிரிய விருத்தம் : 6 சீர் முதல் எத்தனை சீரும்

வரலாம்; நான்கடி.

3. கலிவிருத்தம் : 4 சீர்; 4 அடி.

4. வஞ்சி விருத்தம் : 3 சீர்; 4 அடி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/103&oldid=655690" இலிருந்து மீள்விக்கப்பட்டது